Google Pay விதிமுறைகளுக்கான பிற்சேர்க்கை: இந்தியாவில் நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான Google Pay சேவை விதிமுறைகள்

இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கான Google Pay சேவை விதிமுறைகள்

கடைசியாக மாற்றப்பட்டது: டிசம்பர் 11, 2024

1. அறிமுகம்

பொருந்தக்கூடிய விதிமுறைகள். Google Pay பயன்படுத்துவதற்கு நன்றி. ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளின் நோக்கங்களுக்காக (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது), "Google Pay" (முன்பு Tez என்று அழைக்கப்பட்டது) என்பது இந்தியாவில் வசிக்கும் பயனர்களுக்காக Google India Digital Services Private Limited நிறுவனம் வழங்கும் ஒரு சேவையாகும். இந்நிறுவனத்தின் பதிவுசெய்த அலுவலக முகவரி: 5th floor, DLF Centre, Block 124, Narindra Place, Sansad Marg, New Delhi - 110001 ("Google"). Google Pay ஆப்ஸை அணுகுவது, பதிவிறக்குவது அல்லது பயன்படுத்துவதன் மூலம் பின்வருபவற்றுக்கு இணங்கிக் கட்டுப்படுவதாக ஒப்புக்கொள்கிறீர்கள்:

  1. Google சேவை விதிமுறைகள் ("உலகளாவிய விதிமுறைகள்");
  2. இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கான இந்த Google Pay சேவை விதிமுறைகள் ("Google Pay விதிமுறைகள்");
  3. Google தனியுரிமைக் கொள்கை ("தனியுரிமைக் கொள்கை");
  4. Google Pay கொள்கைகள்  ("Google Pay கொள்கைகள்");
  5. Google Pay ஆஃபருக்கான சேவை விதிமுறைகள் ("பொதுவான Google Pay ஆஃபர்களுக்கான விதிமுறைகள்"); மற்றும்
  6. Google Pay புகார்களைக் கையாளுதல் தொடர்பான கொள்கை ("புகார்களைக் கையாளுதல் தொடர்பான கொள்கை").

இந்த ஆறு ஆவணங்கள் மொத்தமாக "ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகள்" என்று இங்கே குறிப்பிடப்படுகின்றன.

இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகள் ஒவ்வொன்றையும் கவனமாகப் படியுங்கள். உங்களின் சட்டப்பூர்வ உரிமைகள், தீர்வுகள், கட்டாயங்கள் ஆகியவை குறித்த முக்கியத் தகவல்கள் உலகளாவிய விதிமுறைகளில் இருப்பதால் அதிலிருந்து படிக்கத் தொடங்குங்கள். இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகள் Google Pay சேவைகளை நீங்கள் அணுகுவதையும் பயன்படுத்துவதையும் நிர்வகிக்கின்ற சட்டப்படி கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை உங்களுக்கும் Googleளுக்கும் இடையே உருவாக்குகின்றன (இங்கே வரையறுக்கப்பட்டுள்ளபடி). இந்த ஆவணங்கள் உங்களுக்குப் புரியவில்லை என்றாலோ அதில் உள்ள விதிமுறைகளில் எதையாவது ஏற்கவில்லை என்றாலோ Google Pay சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம். Google Pay ஆப்ஸில் சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படக்கூடும் என்பதையும் அதற்கேற்றபடி இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகள் அவற்றுக்கும் பொருந்தக்கூடும் என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள்.

Google குழு நிறுவனங்களின் பயன்பாடு. உங்களுக்கு Google சார்பாக ஏதேனும் Google Pay சேவைகளை வழங்க தனது குழு நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்த (இங்கே வரையறுக்கப்பட்டுள்ளபடி) Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள்.

அவ்வப்போது இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளில் எதையாவது மாற்ற Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளை அடிக்கடி படித்து, அவற்றின் சமீபத்திய மாற்றங்களைத் தெரிந்து வைத்திருப்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். இந்த Google Pay விதிமுறைகளுக்கும் உலகளாவிய விதிமுறைகளுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் Google Pay விதிமுறைகளே பொருந்தும்.

ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இவற்றுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு உத்திரவாதம் அளிக்கிறீர்கள்:

  • நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்;
  • சட்டப்படி கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கத் தகுதிபெற்றவர்; மற்றும்
  • இந்தியச் சட்டங்களின் கீழ் Google Pay ஆப்ஸை அணுகுவது/பயன்படுத்துவதிலிருந்து நீங்கள் தடைசெய்யப்படவில்லை அல்லது சட்டப்பூர்வமாகத் தடுக்கப்படவில்லை.

பெற்றோர்/சட்டப்பூர்வக் காப்பாளர் அனுமதித்தல். நீங்கள் 18 வயதுக்குட்பட்டவர் (“டீன் ஏஜர்கள்”) என்றால் Google Pay ஆப்ஸைப் பயன்படுத்துவதற்கு உங்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் அனுமதியைப் பெற்றுள்ளீர்கள் என்பதற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்கள். அவர்களையும் ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளை உங்களுடன் சேர்ந்து படித்து ஏற்கச் செய்யுங்கள்.

நீங்கள் டீன் ஏஜரின் பெற்றோர்/சட்டப்பூர்வக் காப்பாளர் என்றால் Google Pay ஆப்ஸைப் பயன்படுத்த அவரை அனுமதிப்பதன் மூலம், ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளுக்கு நீங்கள் உட்படுவதுடன் இந்த ஆப்ஸில் அவரின் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவீர்கள். அதனால், டீன் ஏஜர்கள் சார்பாக அவர்களின் பெற்றோர்/சட்டப்பூர்வக் காப்பாளர் ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவர்கள் Google Pay ஆப்ஸைப் பயன்படுத்த முடியும்.

மூன்றாம் தரப்பின் விதிமுறைகளும் நிபந்தனைகளும். Google Pay ஆப்ஸிலேயே மூன்றாம் தரப்புத் தயாரிப்புகளையோ சேவைகளையோ நீங்கள் அணுகுவதற்கு Google வழிவகை செய்யக்கூடும். இந்த மூன்றாம் தரப்புத் தயாரிப்புகளையோ சேவைகளையோ பயன்படுத்த, நீங்கள் கூடுதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று கூடுதல் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கும்.

2. வரையறைகள்

இந்த Google Pay விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள வரையறைகள்:

"பொருந்தக்கூடிய சட்டம்" என்பது அனைத்துப் பொருந்தக்கூடிய சட்டங்கள், விதிகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்கள், சட்டப்பூர்வ/அரசு அறிவிப்புகள் (இந்திய ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறைகள், பேமெண்ட் பங்கேற்பாளருக்கான விதிகள் உட்பட) ஆகியவற்றைக் குறிக்கிறது.

"BBPOU" என்பது பொருந்தக்கூடிய Bharat Bill Payment System ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் Bharat Bill Payment Operating Unitடைக் குறிக்கிறது.

"பில்லர்" என்பது Google Pay ஆப்ஸில் பயனர் பில் பேமெண்ட் செய்யும் பில்லரைக் குறிக்கிறது (பில்லர் ஒருங்கிணைப்பாளர் மூலமாகவோ BBPOU மூலமாகவோ பில் பேமெண்ட் சேவைகளுக்காக Google Pay ஆதரிக்கும் பிரீபெய்டு சேவை வழங்குநர்கள் உட்பட).

"பில் பேமெண்ட் சேவைகள்" என்பது பயனர்கள் Google Pay ஆப்ஸில் பில்களையோ பிரீபெய்டு திட்டங்களையோ பார்ப்பதற்கும், பில்லர்களுக்குப் பேமெண்ட்டுகள் செய்வதற்கும், பிற துணைச் சேவைகளைப் பெறுவதற்கும் வழங்கப்பட்டுள்ள வசதியைக் குறிக்கிறது.

கிரெடிட் கார்டு” என்பது கடன் வழங்கும் நிறுவனத்துடனான உங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த நிறுவனம் உங்களுக்கு வழங்கும் ஏதேனும் கிரெடிட் கார்டைக் குறிக்கும்.

கிரெடிட் கார்டு சேவைகள்” என்பது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான Google Pay சேவைகள், கடன் வழங்கும் நிறுவனங்கள் உங்களுக்கு அளிக்கும் தொடர்புடைய ஆஃபர்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.

கிரெடிட் தகவல்கள்” என்பது உங்கள் கிரெடிட் ஸ்கோர், உங்கள் கிரெடிட் தகவல் அறிக்கை போன்ற ஏதேனும் குறிப்பிட்ட கிரெடிட் தகவல்களைக் குறிக்கிறது.

“கிரெடிட் தகவல் அறிக்கை” என்பது TUCIBIL உருவாக்குகின்ற அறிக்கையைக் குறிக்கிறது, GPay ஆப்ஸில் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

"கிரெடிட் நிறுவனங்கள்" என்பது பயனர்களுக்கு அட்வான்ஸ்கள், கடன்களை வழங்குவதற்கு, பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்ற பேங்க்குகள், பேங்க்குகள் அல்லாத பிற நிதி நிறுவனங்கள், பிற கிரெடிட் வழங்குநர்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது.

"கிரெடிட் ஸ்கோர்" என்பது Google Pay ஆப்ஸில் உங்கள் கிரெடிட் தகவல் அறிக்கையில் TUCIBIL வழங்கிய ஸ்கோரைக் குறிக்கிறது.

"கிரெடிட் ஸ்கோர் சிமுலேட்டர்" என்பது நிதிச் சேவைகளின் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் உங்களின் தற்போதைய CIBIL ஸ்கோரில் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உங்களுக்கு விளக்குவதற்காக Google Pay ஆப்ஸில் TUCIBIL வழங்கும் கருவியாகும் (உதாரணத்திற்கு, கிரெடிட்டைச் செலுத்தாமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்பு).

"வாடிக்கையாளரின் பேங்க்" என்பது பயனர் UPI மூலம் பேமெண்ட் பரிவர்த்தனைகள் (பணம் அனுப்புதல்/பெறுதல்) செய்யும் நோக்கத்திற்காக எந்த நிதியளிக்கும் அக்கவுண்ட்டை இணைத்துள்ளாரோ அந்த நிதியளிக்கும் அக்கவுண்ட்டை வைத்திருக்கும் பேங்க்கைக் குறிக்கிறது.

"இறுதிப் பயனருக்கான அனுமதிக்கப்பட்ட நோக்கம்" என்பது Google Pay ஆப்ஸில் நீங்கள் கேட்கும்போது, கீழுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு உங்கள் கிரெடிட் தகவல்களுக்கான அணுகலை வழங்கும் நோக்கத்திற்காக மட்டும் உங்கள் கிரெடிட் தகவல்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.

"நிதியளிக்கும் அக்கவுண்ட்" என்பது பணம் அனுப்புவதற்கோ பெறுவதற்கோ பயனர் பதிவு செய்திருக்கும்/பயன்படுத்தும் கிரெடிட் கார்டு, பேங்க் அக்கவுண்ட் (டெபிட் கார்டு/நெட்பேங்க்கிங் மூலம்), BHIM UPI அக்கவுண்ட், பிரீபெய்டு கட்டண முறை (எ.கா. கேஷ் கார்டு, மின்னணு வாலட்) ஆகியவற்றைக் குறிக்கிறது.

"GAP" என்பது MMTC வழங்கும் தங்கச் சேமிப்புத் திட்டத்தைக் குறிக்கிறது.

"தங்கக் கணக்கு" என்பது Google Pay ஆப்ஸில் GAP உடன் இணைக்கப்பட்டிருக்கும் கணக்கைக் குறிக்கிறது.

"தங்கம்" என்பது உங்கள் GAP கணக்கில் இருக்கும் தங்கத்தைக் குறிக்கிறது.

"Google கணக்கு" என்பது Google Pay மற்றும் பிற Google சேவைகளை உலகளாவிய விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்துவதற்காக Google அல்லது குழு நிறுவனங்கள் மூலம் நீங்கள் உருவாக்கும் கணக்கைக் குறிக்கிறது.

"Google குழு நிறுவனங்கள்" அல்லது "குழு நிறுவனங்கள்" என்பது Googleளின் முதன்மை நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள், அனைத்து அதிகாரம் கொண்ட முதன்மை நிறுவனம், அதன் நேரடி/மறைமுகத் துணை நிறுவனங்கள் (அவற்றின் இணை நிறுவனங்கள் உட்பட) ஆகியவற்றைக் குறிக்கிறது.

"Google Pay சேவைகள்" அல்லது "சேவைகள்" என்பது Google Pay ஆப்ஸ்/பிற பிளாட்ஃபார்ம்கள் மூலம் Google வழங்கும் பேமெண்ட் பரிவர்த்தனையை எளிதாக்கும் சேவைகள், மொபைல் ரீசார்ஜ்கள், பில் பேமெண்ட் சேவைகள் மற்றும் பிற சேவைகளைக் குறிக்கிறது.

"கடன் வசதி" என்பது கடன் வழங்கும் மூன்றாம் தரப்புடனான உங்கள் ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் உங்களுக்கு வழங்கும் கடன்களையும் அட்வான்ஸ்களையும் குறிக்கிறது.

"கடன் வழங்கும் சேவைகள்" என்பது கடன் வழங்கும் மூன்றாம் தரப்புகளிடமிருந்து நீங்கள் கடன் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கும் Google Pay சேவைகளைக் குறிக்கிறது

"வணிகர்" என்பது (i) Google Pay for Business திட்டத்தைப் பயன்படுத்தும்; அல்லது (ii) பேமெண்ட் பங்கேற்பாளர் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு Google Pay ஆப்ஸைப் பேமெண்ட் முறையாக வழங்கும்; அல்லது (iii) ஆஃப்லைனிலோ ஏதேனும் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களிலோ வியாபாரியிடமிருந்து வாங்கிய பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெற Google Pay ஆப்ஸைப் பயன்படுத்தும் நபர்/தரப்பைக் குறிக்கிறது.

"MMTC" என்பது Google Pay மூலம் GAPபை வழங்கும் MMTC-PAMP நிறுவனத்தைக் குறிக்கிறது.

"NPCI" என்பது UPIக்கு உரிமையாளராக இருந்து இயக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பேமெண்ட்டுகள் சிஸ்டம் ஆப்ரேட்டரான நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவைக் குறிக்கிறது.

"P2P சேவை" என்பது P2P பேமெண்ட் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் Google Pay சேவைகளைக் குறிக்கிறது.

"P2P பேமெண்ட்" அல்லது "பியர்-டு-பியர் பேமெண்ட்" என்பது P2P சேவையைப் பயன்படுத்தி பயனர் மேற்கொள்ளும் பேமெண்ட்டைக் குறிக்கிறது. இந்தச் சேவை பயனரின் (அனுப்புநர்) நிதியளிக்கும் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை டெபிட் செய்து (அல்லது கட்டணம் விதித்தல்) அந்தப் பணத்தைப் பெறுநர் தேர்ந்தெடுத்து இருக்கும் கட்டண முறைக்கு அனுப்பும்.

"கட்டண முறை" என்பது ஒரு பயனர் பணம் அனுப்ப அல்லது ஒரு பெறுநர் பேமெண்ட்டுகளைப் பெறப் பயன்படுத்துவதற்குத் தகுதிபெற்ற கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பேங்க் அக்கவுண்ட், பிரீபெய்டு கட்டண முறை (பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்னணு வாலட்கள், கிஃப்ட் கார்டுகள் உட்பட) ஆகியவற்றையும் இன்ன பிறவற்றையும் குறிக்கிறது.

"பேமெண்ட்டுகள் சிஸ்டம்" பொருந்தக்கூடிய சட்டத்தின் விதிகளின் கீழ் அதற்கு வழங்கப்பட்டுள்ள அர்த்தத்தைக் கொண்டிருக்கும்.

"பேமெண்ட் பங்கேற்பாளர்கள்" என்பது பேமெண்ட் சிஸ்டத்தில் இருக்கும் அனைத்துத் தரப்புகளையும் குறிக்கிறது. (பேமெண்ட்/பில் ஒருங்கிணைப்பாளர்கள், பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர்கள், செயல்படுத்தும் பேங்க்குகள், கூட்டாளர் பேங்க்குகள், அனுப்புநர் நிதியளிக்கும் அக்கவுண்ட்டின் வழங்குநர், பெறுநர் பேங்க் அக்கவுண்ட்டை வழங்கும் பேங்க், கட்டண முறைகள் வழங்குநர், கார்டு அசோசியேஷன்கள், NPCI, இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவையும் இன்ன பிறவும்).

பேமெண்ட் சேவை வழங்குநர்” அல்லது “PSP” என்பது பேமெண்ட் பங்கேற்பாளராகச் செயல்படும் (UPI கட்டமைப்பின் கீழ் 'பேமெண்ட் சேவை வழங்குநராகச்' செயல்பட அங்கீகரிக்கப்பட்டது) மற்றும் பயனர்களுக்கு UPI சேவைகளை வழங்க TPAPயைப் பயன்படுத்தும் பேங்க்கிங் நிறுவனமாகும்.

"பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர்கள்" என்பது பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர்களின் சேவைகளைப் பயன்படுத்தி பேமெண்ட் பரிவர்த்தனைகளை எளிதாக்க (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) Google ஒப்பந்தம் செய்துள்ள பேங்க்குகள், நிதி நிறுவனங்கள், கார்டு அசோசியேஷன்கள் மற்றும் பிற பேமெண்ட் அமைப்பு வழங்குபவர்களை (பேமெண்ட் மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டங்கள் சட்டம், 2007ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி) குறிக்கிறது.

"பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர் சேவைகள்" என்பது (i) கார்டு பரிவர்த்தனைகள், (ii) BHIM UPI அடிப்படையிலான பரிவர்த்தனைகள்; (iii) நெட் பேங்க்கிங், (iv) பிரீபெய்டு கட்டண முறை; மற்றும் வழங்குநர்கள், கார்டு அசோசியேஷன்கள், NPCI மற்றும்/அல்லது பிற மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்பாளர்களிடம் இருந்து அங்கீகாரத்தையும் அங்கீகரிப்பையும் வழங்குதல்; மற்றும்/அல்லது (v) பயனர் தொடங்கிய பேமெண்ட் வழிமுறைகளுக்கான செட்டில்மெண்ட் வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்காகப் பேமெண்ட் பங்கேற்பாளர்களுக்குப் பேமெண்ட் வழிமுறைகளைத் தெரிவிக்கும் பேமெண்ட் கேட்வே சிஸ்டம்/இடைமுகம்/சேவைகளைக் குறிக்கிறது.

"பெறுநர்" என்பது அனுப்புநரிடமிருந்து பணம் பெறும் பயனர், வணிகர், பில்லர் அல்லது மூன்றாம் தரப்பைக் குறிக்கிறது.

"அனுப்புநர்" என்பது பெறுநருக்குப் பணம் அனுப்ப Google Pay சேவைகளைப் பயன்படுத்தும் பயனரைக் குறிக்கிறது.

TPAPகள்” என்பது Google Pay ஆப்ஸை வழங்கும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் வழங்குநரான (TPAP - Third Party Application Provider) எங்களைக் குறிக்கிறது. பயனர்களுக்கு UPI சார்ந்த பேமெண்ட் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் UPI இணக்கம் கொண்ட ஆப்ஸை நாங்கள் வழங்குகிறோம்.

"பரிவர்த்தனை" அல்லது "பேமெண்ட் பரிவர்த்தனை" என்பது (i) பணம் அனுப்ப/பெற பயனர் மேற்கொண்ட பேமெண்ட் கோரிக்கை; மற்றும் (ii) தனது நிதியளிக்கும் அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் செய்ய அனுப்புநர் வழங்கிய பேமெண்ட் வழிமுறைகளைக் குறிக்கிறது.

"UPI" என்பது யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸைக் குறிக்கும்.

"UPI பரிவர்த்தனைத் தரவு" என்பது தனிநபர் UPI பரிவர்த்தனைத் தரவைக் குறிக்கிறது (அதாவது தெளிவான எழுத்து வடிவில் இருக்கும் தரவு).

"பயனர்" என்பது பணம் அனுப்ப/பெற Google Pay சேவைகளுக்கு (UPI பேமெண்ட் வசதி உட்பட) பதிவு செய்திருப்பவரைக் குறிக்கிறது. பயனர் டீன் ஏஜராக இருந்தால் அவரின் பெற்றோர்/சட்டப்பூர்வக் காப்பாளரையும் குறிக்கும்.

"நாங்கள்", "எங்களுடைய" அல்லது "எங்கள்" என்பது Googleளைக் குறிக்கிறது.

"நீங்கள்", "உங்களை" அல்லது "உங்கள்" என்பது பயனரைக் குறிக்கிறது.

3. Google Pay சேவைகளின் வரம்பு

Google Pay ("Google Pay" அல்லது "Google Pay ஆப்ஸ்") என்பது Google Pay சேவையை வழங்கும் பேமெண்ட் ஆப்ஸாகும். Google Pay மூலம், சேவை வழங்குநர்கள், பயனர்கள், வணிகர்கள், பில்லர்கள் அல்லது மூன்றாம் தரப்புகளுக்கு Google Pay ஆப்ஸில் ஏற்றுக்கொள்ளப்படும் ஏதேனும் கட்டண முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் பணம் அனுப்பலாம். Google Pay ஆப்ஸில் நீங்கள் பணத்தைப் பெறத் தேர்ந்தெடுத்து இருக்கும் கட்டண முறையில் பிற பயனர்கள்/மூன்றாம் தரப்புகள் அனுப்பும் பணத்தையும் நீங்கள் பெறலாம். அத்துடன் பிற பயனர்கள், சேவை வழங்குநர்கள், பேங்க்குகள், வணிகர்கள், பில்லர்கள் ஆகியோருக்குத் தகவல் அனுப்பவும், அவர்களிடம் இருந்து தகவல்கள், ஆஃபர்கள் மற்றும் சேவைகளைப் பெறவும் உங்களை Google Pay அனுமதிக்கிறது. UPI பேமெண்ட் பரிவர்த்தனைகள் தொடர்பாக, Google Pay என்பது HDFC Bank, Axis Bank, ICICI Bank, State Bank of India ஆகியவற்றின் மூலமான பேமெண்ட் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு NPCIயால் அங்கீகரிக்கப்பட்ட TPAP ஆகும். சேவை வழங்குநரான நாங்கள், PSP பேங்க்குகள் மூலம் UPIயில் பங்கேற்கிறோம். NPCI மற்றும் எங்களின் ஒவ்வொரு ஸ்பான்சர் PSPகளுடன் (HDFC Bank, ICICI Bank, Axis Bank மற்றும் State Bank of India) செய்துள்ள முத்தரப்பு ஒப்பந்தங்களுக்கு இணங்கி நாங்கள் செயல்படுகிறோம். UPI பேமெண்ட் பரிவர்த்தனையில் Google Pay, PSP, NPCI ஆகியவற்றின் தெளிவான பணிகளையும் பொறுப்புகளையும் தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள். சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு, UPI பரிவர்த்தனைகள் தொடர்பாக நீங்கள் அந்த PSPயின் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்படுவீர்கள். அத்துடன், UPI பரிவர்த்தனைகளுக்கு இணங்க அல்லது அந்தப் பரிவர்த்தனைகளின்போது PSP பேங்க்கிற்குக் கிடைக்கும் உங்களின் தனிப்பட்ட தரவை அது பயன்படுத்துவதும் செயலாக்குவதும் அந்த பேங்க்கின் இணையதளத்தில் இருக்கும் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டது.

Google Pay ஆப்ஸிலேயே மூன்றாம் தரப்புத் தயாரிப்புகளையோ சேவைகளையோ நீங்கள் அணுகுவதற்கு Google Pay வழிவகை செய்யக்கூடும். இந்த மூன்றாம் தரப்புத் தயாரிப்புகளையோ சேவைகளையோ Google அல்லாத பிற தரப்புகள் வழங்குகின்றன. மேலும் இவை மூன்றாம் தரப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டவை. இந்த மூன்றாம் தரப்புச் சேவைகளைப் பயன்படுத்த, நீங்கள் கூடுதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று கூடுதல் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கும். நீங்கள் நம்பும் மூன்றாம் தரப்புத் தயாரிப்பு/சேவையுடன் மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டும். Google Pay ஆப்ஸில் மூன்றாம் தரப்புத் தயாரிப்பு/சேவையை நீங்கள் பயன்படுத்தியதன் விளைவாக உங்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதற்கு Google எந்த வகையிலும் பொறுப்பாகாது.

பேமெண்ட் பரிவர்த்தனை நடைபெறும் விதம். Google Pay மூலம் செய்யப்படும் பேமெண்ட் பரிவர்த்தனைகள் அல்லது ஏதேனும் தகவல்பரிமாற்றம்/ஆஃபர்கள் பேமெண்ட் அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் இடையில் மட்டுமே நடைபெறும். பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர் சேவைகளைப் பயன்படுத்தி பேமெண்ட்டுகளை அனுப்புவதை மற்றும்/அல்லது பெறுவதை எளிதாக்க, அனுப்புநர், பெறுநர் மற்றும் தொடர்புடைய பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர்களுக்கு இடையே Google Pay ஓர் இணைப்பை ஏற்படுத்துகிறது. பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர் சேவைகள் மூலம் பேமெண்ட் பரிவர்த்தனை அங்கீகரிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டுச் செயலாக்கப்பட்டதும்:

(i) தொடர்புடைய பேமெண்ட் பங்கேற்பாளர்கள் மூலம் பெறுநருக்கு நேரடியாகப் பேமெண்ட் செட்டில் செய்யப்படக்கூடும்; அல்லது

(ii) குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், நாங்கள் ஓர் இடைத்தரகராகச் செயல்பட்டு, பெறுநரின் சார்பாகப் பேமெண்ட் பரிவர்த்தனையுடன் தொடர்புடைய பணத்தைப் பெறக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில், பயனர்களிடமிருந்து பணம் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பெறுநரின் பேமெண்ட் சேகரிப்பு ஏஜெண்ட்டாக Google செயல்படும்.

பேமெண்ட் பரிவர்த்தனைகளில் Googleளின் பொறுப்பு. இவற்றைப் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள்:

  • பேமெண்ட் பரிவர்த்தனைகளின் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே Google செயல்படுகிறது.
  • Google இந்தப் பேமெண்ட் பரிவர்த்தனைகளின் ஒரு தரப்பாகச் செயல்படவில்லை.
  • Google ஒரு பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர் அல்ல.
  • குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், Google ஓர் இடைத்தரகராகச் செயல்பட்டு, பெறுநரின் சார்பாகப் பணம் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பேமெண்ட் சேகரிப்பு ஏஜெண்ட்டாகச் செயல்படக்கூடும்.
  • நீங்கள் பர்ச்சேஸ் செய்யும் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் எந்தவொரு அம்சத்திற்கும் Google பொறுப்பாகாது.
  • நீங்கள் செய்யும் ஏதேனும் தகவல்பரிமாற்றங்கள் அல்லது Google Pay மூலம் உங்களுக்கு வழங்கப்படும் ஏதேனும் தகவல்பரிமாற்றம்/ஆஃபர்களுக்கு Google பொறுப்பேற்காது.
  • பேமெண்ட் பரிவர்த்தனைகளில் ஏற்படும் எந்தவொரு சிக்கல்கள், சார்ஜ்பேக்குகள் அல்லது ரிவர்ஸல்களுக்கு Google ஒரு தரப்பாகச் செயல்படாது, மேலும் அவற்றுக்குப் பொறுப்பேற்காது.
  • பரிவர்த்தனையை நிறைவுசெய்யத் தவறியது உட்பட பயனரின் எந்தவொரு செயலுக்கும் Google பொறுப்பாகாது.
  • பரிவர்த்தனையைச் செயல்படுத்துவது, அனுப்புநர் பயன்படுத்திய நிதி அக்கவுண்ட்டில் போதுமான பணம் இருக்கிறதா, பரிவர்த்தனை அங்கீகரிக்கப்படுமா செயலாக்கப்படுமா அல்லது பேமெண்ட் செய்த பிறகு சார்ஜ்பேக் அல்லது பிற ரிவர்ஸல்கள் இருக்காது என்பதற்கு உத்திரவாதம் அளிக்காது.
  • எந்தவொரு பேமெண்ட் பரிவர்த்தனைக்கும் பொறுப்பாளராகவோ நம்பகப் பொறுப்புநிலையிலோ Google செயல்படுவதில்லை.
  • விற்பனைக்கு வழங்கப்படும் தயாரிப்புகள், சேவைகளின் விலை உட்பட பேமெண்ட் பரிவர்த்தனையின் தொழில்ரீதியான விதிமுறைகளை Google தீர்மானிப்பதில்லை, அறிவுறுத்துவதில்லை அல்லது எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதில்லை.

Google பொறுப்பிற்கான பொறுப்புதுறப்பு. நீங்கள் பர்ச்சேஸ் செய்யும் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் எந்தவொரு அம்சத்திற்கோ உங்களுக்கு வழங்கப்படும் தகவல்பரிமாற்றங்களுக்கோ ஆஃபர்களுக்கோ Google பொறுப்பாகாது. பணம் பெறுபவரின் பேமெண்ட் சேகரிப்பு ஏஜெண்ட்டாக Google செயல்படுவது, வணிகரால் விற்கப்படும் தயாரிப்புகள் மற்றும்/அல்லது சேவைகள் தொடர்பான மோசடி, விற்பனைக்குப் பிறகான அல்லது உத்திரவாதச் சேவைகளை வழங்கத் தவறுதல், பொறுப்பை ஏற்றுக்கொண்டு உத்திரவாதம் அளித்தல்களை மீறுதல் ஆகியவற்றுக்கு Googleளைப் பொறுப்பாக்காது.

பில் பேமெண்ட் சேவைகள். Google Pay வழங்கும் பில் பேமெண்ட் சேவைகள் மூலம் Google Pay ஆப்ஸைப் பயன்படுத்தி உங்கள் பில்களையோ தகுதிபெறும் பிரீபெய்டு திட்டங்களையோ நீங்கள் பார்க்கலாம் மற்றும் பில்லர்களுக்குப் பணம் செலுத்தலாம். Google Pay மூலம் வழங்கப்படும் பில் பேமெண்ட் சேவைகள் (i) Bharat Bill Payment Operating Unit ("BBPOU") மூலம், BBPSஸில் பங்கேற்க NPCIயில் பில்லர் பதிவுசெய்துள்ள Bharat Bill Payment System ("BBPS") கட்டமைப்பின் கீழ் வழங்கப்படுகின்றன அல்லது (ii) Google ஒப்பந்தம் செய்துள்ள பில்லர் ஒருங்கிணைப்பாளரால் வழங்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். அத்துடன், Google Pay பில் வழங்கலையும் பில் பேமெண்ட்டையும் மட்டுமே ஒருங்கிணைக்கிறது என்பதையும் (i) பில்லர் BBPSஸுக்காக NPCIயில் பதிவுசெய்திருந்தால் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க BBPOUவின் ஏஜெண்ட்டாகவோ; (ii) பில் பேமெண்ட் ஒருங்கிணைப்பாளராகவோ இருக்கும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

கிரெடிட் கார்டு சேவைகள். கிரெடிட் நிறுவனங்கள் உங்களுக்குக் கிரெடிட் கார்டு ஆஃபர்களைக் காட்டுவதற்கான தொழில்நுட்பப் பிளாட்ஃபார்மை Google Pay வழங்குகிறது. இதுபோன்ற எந்தவொரு கிரெடிட் கார்டின் விதிமுறைகளும் உங்களுக்கும் அத்தகைய கிரெடிட் கார்டிற்கான கிரெடிட் நிறுவனத்திற்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். கார்டு விண்ணப்பத்தை அனுமதிப்பதா நிராகரிப்பதா என்பது குறித்து கிரெடிட் கார்டை வழங்கும் கிரெடிட் நிறுவனமே அதன் விருப்புரிமைபடி முடிவு எடுக்கும். இதுபோன்ற ஒப்பந்தங்களில் Google ஒரு தரப்பாகச் செயல்படாது மற்றும் பங்கு வகிக்காது. மேலும் எதற்கும் பொறுப்பேற்காது அல்லது உத்திரவாதங்கள் அளிக்காது. இதுபோன்ற கிரெடிட் கார்டுகள் தொடர்பாக Googleளின் பங்கு, கிரெடிட் நிறுவனங்கள் வழங்கும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான தொழில்நுட்பச் சேவைகளை வழங்குவதும் Google Pay பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய கிரெடிட் கார்டுகள் தொடர்பான சேவைகளையும் ஆஃபர்களையும் வழங்க கிரெடிட் நிறுவனங்களுடன் கூட்டுப்பணியாற்றுவதும் மட்டுமே ஆகும் (எ.கா. Axis Bank வழங்கும் மற்றும் Googleளுடன் இணைந்து மார்க்கெட்டிங் செய்யப்படும் Axis Bank ACE கார்டு).

கடன் வசதி தொடர்பான சேவைகள். கடன் வழங்கும் மூன்றாம் தரப்புகளிடமிருந்து உங்களுக்கு கடன் வசதி ஆஃபர்களைக் காட்டுவதற்கான தொழில்நுட்பப் பிளாட்ஃபார்மை Google Pay வழங்குகிறது. இதுபோன்ற கடன் வசதி தொடர்பான விதிமுறைகள் உங்களுக்கும் கடன் வழங்கும் மூன்றாம் தரப்புக்கும் இடையே செய்யப்பட்ட கடன் ஒப்பந்தங்களால் நிர்வகிக்கப்படும் என்பதைப் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். Google இதுபோன்ற பரிவர்த்தனைகளில் இடைத்தரகுத் தொழில்நுட்பப் பிளாட்ஃபார்மாக மட்டுமே செயல்படுகிறது, கடன் ஒப்பந்தங்களின் ஒரு தரப்பாகச் செயல்படவில்லை.

Google Pay தங்கச் சேவைகள். MMTC மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தங்கத்தை விற்கவும், டெலிவரி செய்யவும், திருப்பி வாங்கவும், பிற தொடர்புடைய சேவைகளை வழங்கவும் MMTC - PAMPக்கு ("MMTC") ஒரு தொழில்நுட்பப் பிளாட்ஃபார்மை Google Pay வழங்குகிறது. MMTC விதிமுறைகளில் உள்ள நிபந்தனைகளும் விதிமுறைகளும் உங்கள் GAPயை நிர்வகிக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள். உங்கள் GAP தொடர்பாக உங்களுக்கு Google எதற்கும் பொறுப்பாகாது.

பிசினஸ் பக்கங்கள். உங்கள் பிசினஸ் பக்கத்தை வெளியிடவும் இயக்கவும் Google Pay உங்களை அனுமதிக்கிறது. உங்கள் பிசினஸ் பற்றிய தகவல்களை வழங்கவும் உங்களின் சில தயாரிப்புகளையும் சேவைகளையும் பட்டியலிடவும் கிடைக்கக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை பிசினஸ் பக்கம் கொண்டிருக்கலாம். உங்கள் நெட்வொர்க்கில் உள்ள எவருக்கும் இந்தப் பக்கத்திற்கான URLலைப் பகிரலாம். உங்கள் பிசினஸ் பக்கத்தைப் பகிர்வதன் மூலம் உங்கள் சுயவிவரப்படமும் பெயரும் பகிரப்பட்டு பொதுவில் காட்டப்படும் என்பதைப் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். Googleளால் குறிப்பாக அனுமதிக்கப்பட்டு பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்கினால் தவிர, P2P பேமெண்ட்டுகளைப் பயன்படுத்தி மாதத்திற்கு 50,000 ரூபாய் வரை பொருட்களையும் சேவைகளையும் பிசினஸ் பக்கங்கள் மூலம் நீங்கள் விற்கலாம். உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குபவருடன் நீங்கள் செய்யும் பரிவர்த்தனைகளில் Google ஒரு தரப்பாகச் செயல்படாது. மேலும் விற்கப்பட்ட பொருட்களுக்கோ சேவைகளுக்கோ Google பொறுப்பேற்காது. பட்டியல், இருப்பு, விலை, லாஜிஸ்டிக்ஸ், சேமிப்புக் கிடங்கு நிர்வாகம், டெலிவரி, நிறைவுசெய்தல் ஆகியவற்றை Google கட்டுப்படுத்தாது அல்லது கண்காணிக்காது. உங்கள் பிசினஸ் பக்கத்தையும் அதன் உள்ளடக்கம் மற்றும் பரிவர்த்தனைகளையும் நிர்வகிப்பது முழுக்க உங்கள் பொறுப்பாகும். Google உங்கள் பிசினஸ் பக்கத்தை அமைப்பதற்கு உதவும் தொழில்நுட்பச் சேவை வழங்குநராக மட்டுமே செயல்படும். பிசினஸ் பக்கங்களின் கீழ் உள்ள தயாரிப்பு அல்லது சேவை தொடர்பான அனைத்து நிகழ்நேரத் தகவல்பரிமாற்றமும் உங்களுக்கும் வாங்குபவருக்கும் இடையே நிகழும். இதில் Googleளின் குறுக்கீடு எதுவும் இருக்காது. பிசினஸ் பக்கங்களுக்கு Google எந்தவித வாடிக்கையாளர் உதவிச் சேவைகளையும் வழங்குவதில்லை அல்லது பரிவர்த்தனையின் நிலையைக் கண்காணிப்பதில் உதவுவதில்லை. பிசினஸ் பக்கங்களில் பயனர் பெறும் தயாரிப்புகள், சேவைகள், தகவல்கள் ஆகியவற்றின் தரம் அல்லது அத்தகைய தயாரிப்புகளோ சேவைகளோ பயனரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என்பதற்கு Google எந்த உத்திரவாதத்தையும் வழங்காது மற்றும் பொறுப்பையும் ஏற்காது. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் புகார்களோ சிக்கல்களோ இருந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள். மேலும் பிசினஸ் பக்கங்கள் தொடர்பான எந்தவித வாடிக்கையாளர் குறைத்தீர்ப்புகளுக்கும் Google பொறுப்பேற்காது. இந்த அம்சத்திற்கான சேவை விதிமுறைகளை நீங்கள் பூர்த்தி செய்ய விரும்பவில்லை என்றாலோ பூர்த்தி செய்ய முடியாவிட்டாலோ ஆப்ஸில் வழங்கப்பட்டுள்ள நிர்வாக விருப்பங்களைப் பயன்படுத்தி உங்கள் பிசினஸ் பக்கத்தை நீக்க வேண்டும்.

4. Google Pay பயன்படுத்துதல்

வயதுக் கட்டுப்பாடுகள். Google Pay பயன்படுத்த, நீங்கள் 13 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும். Google Payயில் உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தும் அனைவரும் ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். இந்தத் தனிநபர்கள் Google Payயில் உங்கள் Google கணக்கு மூலம் மற்றும்/அல்லது உங்கள் கணக்கில் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.

பிராந்தியக் கட்டுப்பாடுகள். Google Payயைப் பயன்படுத்த அதில் உங்கள் Google கணக்கைப் பதிவுசெய்யும்போதோ இணைக்கும்போதோ இந்தியாவில் இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்திய பேங்க் அக்கவுண்ட்டையும் இந்திய மொபைல் எண்ணையும் வைத்திருக்க வேண்டும். இந்தியாவிற்கு வெளியே Google Pay ஆப்ஸைப் பயன்படுத்தக்கூடாது.

அடிப்படைப் பயன்பாட்டுத் தேவைகள். Google Payயைப் பயன்படுத்த அவ்வப்போது மாறக்கூடிய குறிப்பிட்ட சிஸ்டம் மற்றும் இணக்கத்தன்மைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மொபைல், இணையம் அல்லது வேறு ஏதேனும் ஆதரிக்கப்படும் சாதனம் ("சாதனம்") உங்களுக்குத் தேவைப்படும். இந்தக் காரணிகளால் Google Pay ஆப்ஸைப் பயன்படுத்துவதற்கான உங்கள் திறனும் அந்த ஆப்ஸின் செயல்திறனும் பாதிக்கப்படக்கூடும். உங்கள் மொபைல் சாதனம் மற்றும் தொலைத்தொடர்புகள் வழங்குநருடனான உங்கள் ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் அனைத்துப் பொருந்தக்கூடிய மாற்றங்கள், புதுப்பிப்புகள், கட்டணங்கள், மற்ற விதிமுறைகள் ஆகியவை உட்பட இத்தகைய தேவைகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் இணையம் அல்லது சாதனச் சேவை வழங்குநரால் ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு மீறல்களுக்கோ தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கோ Google பொறுப்பேற்காது.

புதுப்பிப்புகள். Google Pay சேவைகளை அணுக, பயன்படுத்த அல்லது தொடர்ந்து பயன்படுத்த, உங்கள் Google Pay ஆப்ஸுக்கோ தொடர்புடைய Google மென்பொருளுக்கோ Google அவ்வப்போது வெளியிடும் புதுப்பிப்புகளை நீங்கள் நிறுவ வேண்டியிருக்கும். பிழைதிருத்தங்கள், பேட்ச்கள், மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், விடுபட்ட செருகுநிரல்கள், புதிய பதிப்புகள் (மொத்தமாக, "புதுப்பிப்புகள்") போன்ற Google Payக்குக் கிடைக்கக்கூடிய புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க உங்கள் Google Pay ஆப்ஸ் அவ்வப்போது Google சேவையகங்களைத் தொடர்புகொள்ளக்கூடும். Google Payயைப் பயன்படுத்த இத்தகைய தானாகக் கேட்கப்பட்ட புதுப்பிப்புகளைப் பெற நீங்கள் ஒப்புதலளித்திருக்க வேண்டும். இதுபோன்ற தானாகக் கேட்கப்பட்டுப் பெறப்படும் புதுப்பிப்புகளுக்கு நீங்கள் ஒப்புதலளிக்கவில்லை எனில் Google Pay ஆப்ஸைப் பயன்படுத்த வேண்டாம். மேலே கூறியவற்றைப் பொருட்படுத்தாமலும் Google Pay ஆப்ஸ் அல்லது உங்கள் சாதனத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய புதுப்பிப்பு அமைப்புகள் எதையும் பொருட்படுத்தாமலும், Google Pay ஆப்ஸ் தொடர்பான மிக முக்கியப் பாதுகாப்புச் சிக்கலைப் புதுப்பிப்பு சரிசெய்யும் என Google தீர்மானித்தால், Google Pay ஆப்ஸை அதன் புதிய பதிப்பிற்கு Google புதுப்பிக்கக்கூடும்.

5. Google Pay சேவைகளை அமைத்தல்

Google Pay பயன்படுத்த உங்களுக்கு Google கணக்கு தேவை. உங்களிடம் ஏற்கெனவே Google கணக்கு இல்லை எனில், Google Payயில் ஒரு கணக்கிற்குப் பதிவுசெய்யலாம். Google Payயில் உங்கள் Google கணக்கில் உள்நுழையும்போது இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உங்கள் Google Pay சேவைகள் செயல்படுத்தப்படும். உங்கள் Google கணக்கை முடக்கினால், Google Pay கணக்கு உட்பட தொடர்புடைய அனைத்துக் கணக்குகளும் இடைநிறுத்தப்படும். உங்கள் Google கணக்கை மீட்டெடுக்கக் கேட்கலாம், இது உங்கள் Google Pay கணக்கிற்கான அணுகலையும் மீட்டெடுக்கும். நீங்கள் Google கணக்கை முடக்கினால், கணக்கு சார்ந்த சில தரவு நீக்கப்படும் அல்லது அழிக்கப்படும் வாய்ப்பு உள்ளது, மேலும் அதை மீட்டெடுக்க முடியாமலும் போகக்கூடும். Google கணக்கை நீங்கள் முடக்கிய பின்னர் அதை மீட்டெடுப்பதன் விளைவாக உங்களுக்கு ஏற்படக்கூடிய தரவு இழப்பிற்கோ வேறு எந்தவிதமான சேதத்திற்கோ Google பொறுப்பேற்காது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.

உள்நுழைவு/பதிவுச் செயல்முறையின்போது அல்லது அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் பெயர், மொபைல் எண், கட்டண முறைத் தகவல்கள் (பொருந்தினால் உங்கள் பேங்க் பெயர், பேங்க் அக்கவுண்ட் எண், கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு விவரங்கள் ஆகியவையும் இன்ன பிறவும்), பிறந்த தேதி மற்றும்/அல்லது பிற பதிவுத் தகவல்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படக்கூடும். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் பதிவுத் தகவல்களைப் பேமெண்ட் பங்கேற்பாளர், சேவை வழங்குநர் மற்றும்/அல்லது மூன்றாம் தரப்பு வழங்குநரிடம் நாங்கள் சரிபார்க்கக்கூடும். சில சமயங்களில், உங்கள் அடையாளத்தையோ நீங்கள் வழங்கிய தகவல்களின் துல்லியத்தையோ சரிபார்க்க எங்களுக்கு உதவ, கூடுதல் தகவல்கள்/ஆவணத்தை எங்களுக்கு அனுப்புமாறோ கூடுதல் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறோ (Google Payயில் உங்கள் Google கணக்கு செயல்படுத்தப்படுவதற்கு முன்பு அல்லது பின்பு) நாங்கள் உங்களிடம் கேட்கக்கூடும். அத்தகைய தரவை வழங்குவதும் பயன்படுத்துவதும் Google தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டது, இதுகுறித்து கீழே பிரிவு 21ல் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வழங்கிய தகவல்கள் மற்றும் ஆவணத்தின் துல்லியத்தையோ முழுமைத்தன்மையையோ எங்களால் சரிபார்க்க முடியவில்லை என்றாலோ பேமெண்ட் பங்கேற்பாளர் விதிகள் அல்லது ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளின்படி Google Payயைப் பயன்படுத்த நீங்கள் தகுதிபெறவில்லை என நாங்கள் தீர்மானித்தாலோ நீங்கள் Google Pay சேவைகளைப் பயன்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கக்கூடும்.

BHIM UPI சேவைகளை அமைத்தல். நீங்கள் BHIM UPIயைப் பயன்படுத்தி பணம் அனுப்பவோ பெறவோ விரும்பினால் Google Payயைப் பயன்படுத்தி, Googleளுடன் கூட்டிணைந்துள்ள BHIM UPI பேமெண்ட்டுகள் சிஸ்டம் வழங்குநரிடம் பதிவுசெய்து, உங்கள் BHIM UPI ஐடி (விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி) மற்றும்/அல்லது இணைக்கப்பட்ட BHIM UPI பின் (MPIN) உள்ளிட்ட உங்கள் BHIM UPI பயனர் அனுமதிச் சான்றுகளை உருவாக்கலாம். BHIM UPI சேவைகளுக்கு நீங்கள் பதிவுசெய்ததும், Google Pay மூலம் BHIM UPIயைப் பயன்படுத்தி உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் அனுப்பலாம் அல்லது பேங்க் அக்கவுண்ட்டில் பணத்தைப் பெறலாம்.

UPI எண் மற்றும் மையப்படுத்தப்பட்ட UPI மேப்பருக்குப் பதிவுசெய்தல். உங்கள் UPI எண்ணைப் பயன்படுத்தி UPI தொடர்பான Google Pay சேவைகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்க, Google Payயில் உங்கள் Google கணக்கிற்கு ஒரு UPI எண்ணை Google ஒதுக்கும் என்பதைப் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். கூடுதலாக, NPCIயின் மையப்படுத்தப்பட்ட மேப்பரிலும் (நியூமெரிக் UPI ஐடி மேப்பர் என்றும் அழைக்கப்படும்) NPCIக்கு அவ்வப்போது தேவைப்படும் மற்றும் தெரிவிக்கும் வேறு எந்தத் தரவுத்தளங்களிலும் Google உங்களைப் பதிவுசெய்யலாம் என்பதை ஏற்றுக்கொண்டு பிரத்தியேகமாக ஒப்புதலளிக்கிறீர்கள். ‘UPI எண்’ என்பது இயல்பாகவே உங்கள் [பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணாக] இருக்கும். அதுமட்டுமல்லாமல் NPCIயின் மையப்படுத்தப்பட்ட மேப்பர்களுக்கு உங்கள் UPI எண்ணைப் பதிவுசெய்ய அனுமதிப்பதன் மூலம் உங்கள் ‘UPI எண்ணைப்’ பயன்படுத்தி Google Pay ஆப்ஸில் பணத்தை அனுப்பலாம் மற்றும்/அல்லது பெறலாம். பதிவுசெய்தல் செயல்முறை NPCIயின் வழிகாட்டுதல்களுக்கும் வழிமுறைகளுக்கும் உட்பட்டது. NPCIயின் வழிமுறைகளின்படி செயல்பட Googleளுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். உங்கள் UPI விவரங்களை NPCI உடன் பகிர்வதல், முதன்மை பேங்க் அக்கவுண்ட்/UPI ஐடியை (விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி) உங்கள் ‘UPI எண்ணுடன்’ இணைத்தல் ஆகியவையும் இன்ன பிறவும் இதிலடங்கும். மையப்படுத்தப்பட்ட மேப்பர்களில் பதிவுசெய்ததும், உங்கள் UPI எண்ணைப் பயன்படுத்தி பணம் அனுப்ப மற்றும்/அல்லது பெற முடியும். Google Pay ஆப்ஸில் [அமைப்புகளை மாற்றுவதன்] மூலம் உங்கள் UPI எண்ணின் இயல்பு மேப்பிங்கை எப்போது வேண்டுமானாலும் இணைப்பு நீக்கத் தேர்வுசெய்யலாம்.

விர்ச்சுவல் கணக்கு எண்ணை அமைத்தல். நீங்கள் Google Payயில் பதிவுசெய்திருக்கும் கிரெடிட்/டெபிட் கார்டைக் குறிக்கும் பேங்க் வழங்கிய விர்ச்சுவல் கணக்கு எண், டிரான்ஸிட் பாஸ்கள், டிஜிட்டல் வாலட்கள் அல்லது Google அல்லாத பிற நிறுவனங்களில் நீங்கள் வைத்திருக்கும் கணக்குகளை (ஒவ்வொன்றும் "விர்ச்சுவல் கணக்கு எண்") பயன்படுத்தி பேமெண்ட் பரிவர்த்தனைகளைச் செய்யவும் Google Payயைப் பயன்படுத்தலாம். விர்ச்சுவல் கணக்கு எண்களை இங்கே பயன்படுத்தலாம்: (i) உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள Google Pay ஆப்ஸ் மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி, பங்கேற்கும் வணிகர் இடங்களில் அல்லது (ii) குறிப்பிட்ட சில வணிகர் ஆப்ஸ் மூலம் ஆன்லைனில் அல்லது (iii) பில் பேமெண்ட்டுகள் அல்லது பிற வணிகர் பேமெண்ட் பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதற்கு உங்கள் Google Pay ஆப்ஸில். இணைக்கப்பட்ட டெபிட் கார்டு/கிரெடிட் கார்டின் உண்மையான எண்ணை Google Pay சேமிக்காது. விர்ச்சுவல் கணக்கு எண்ணை மட்டுமே சேமிக்கும்.

Google Payயில் விர்ச்சுவல் கணக்கு எண்ணைச் சேர்க்கத் தொடங்கிய பிறகு, அது தகுதிபெறும் பேமெண்ட் முறையா என்பதை Google Pay சரிபார்க்கும். உங்கள் பேமெண்ட் முறையின் வழங்குநர் Google Payயை ஆதரிப்பதோடு அந்தப் பேமெண்ட் முறை தகுதிபெறக்கூடியதாக இருந்தால், அதைச் சேர்க்கும்போது வழங்குநரின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கும்படி கேட்கும் திரையை நீங்கள் பார்க்கக்கூடும். நீங்கள் அதை ஏற்றுவிட்டு பேமெண்ட் முறையைச் சேர்த்ததும், Google Payயில் பயன்படுத்துவதற்கு உங்கள் பேமெண்ட் முறையின் உண்மையான கார்டு எண் அல்லது பிற அடையாளங்காட்டியைக் குறிக்கும் விர்ச்சுவல் கணக்கு எண்ணை உங்கள் Google கணக்கில் Google Pay சேமிக்கும்.

Googleளோ அதன் இணை நிறுவனமோ வழங்குநராக இருந்தால் தவிர, Googleளோ அதன் இணை நிறுவனங்களோ உங்கள் பேமெண்ட் முறைகளின் பயனர் ஒப்பந்தம், தனியுரிமைக் கொள்கை அல்லது பிற பயன்பாட்டு விதிமுறைகளில் ஒரு தரப்பாக இருக்காது. இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளில் எதுவும் அத்தகைய வழங்குநர் விதிமுறைகளை மாற்றாது. இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளுக்கும் உங்கள் வழங்குநரின் விதிமுறைகள்/தனியுரிமைக் கொள்கைக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடுகள் இருக்கும்பட்சத்தில், இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகள் Google Pay தொடர்பாக உங்களுக்கும் Googleளுக்கும் இடையிலான உறவை நிர்வகிக்கும். மேலும் உங்கள் வழங்குநரின் விதிமுறைகள் உங்களுக்கும் வழங்குநருக்கும் இடையிலான உறவை நிர்வகிக்கும். உங்கள் பேமெண்ட் முறைகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன என்றோ வணிகர்/டிரான்ஸிட் வழங்குநர் உடனான எந்தவொரு பரிவர்த்தனைக்கும் Google Payயைப் பயன்படுத்தும்போது பேமெண்ட் முறை வழங்குநர் அந்தப் பரிவர்த்தனையை அங்கீகரிப்பார்/அனுமதிப்பார் என்றோ Google எந்த உத்திரவாதமும் அளிக்காது அல்லது உறுதிசெய்யாது.

Googleளோ அதன் இணை நிறுவனமோ வழங்குநராக இருந்தால் தவிர, Google அல்லது அதன் இணை நிறுவனங்கள் கிரெடிட் வழங்குவதிலோ கிரெடிட்டுக்கான தகுதிநிலையைத் தீர்மானிப்பதிலோ ஈடுபடுவதில்லை, மேலும் அவை பின்வருவனவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை: பேமெண்ட் முறைகள் அல்லது நிதிகளின் கிடைக்கும்தன்மை அல்லது துல்லியத்தன்மை; Google Payயில் பேமெண்ட் முறைகளை அமைத்தல் (அல்லது சேர்த்தல்) அல்லது பேமெண்ட் முறை பேலன்ஸ்களில் நிதியைச் சேர்த்தல். குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக உங்கள் விர்ச்சுவல் கணக்கு எண்ணைப் பதிவு செய்தல்/பதிவு நீக்குதல், பேமெண்ட் பரிவர்த்தனை வரம்புகளை அமைத்தல் மற்றும் மாற்றுதல் ஆகிய சேவைகளை உங்கள் வழங்குநர் வழங்குகிறார். மேற்கூறியவை தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் பேமெண்ட் முறையின் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

பில் பேமெண்ட் சேவைகளை அமைத்தல். பில் பேமெண்ட் சேவைகளைப் பயன்படுத்த, நீங்கள் பேமெண்ட்டுகள் செய்ய விரும்பும் பில்லர்களுக்கான பில் கணக்குத் தகவல்கள் (உங்கள் வாடிக்கையாளர் கணக்கு எண், பதிவுசெய்த மொபைல் எண், வாடிக்கையாளர் ஐடி போன்றவை), அத்தகைய பில்லர்களிடம் உங்கள் கணக்கு, பில்/திட்ட விவரங்கள் ஆகியவற்றை அணுகுவதற்குத் தேவையான வேறு ஏதேனும் தகவல்களை எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டியிருக்கும் ("பில் பேமெண்ட் கணக்குத் தகவல்கள்"). பில் பேமெண்ட் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பில் பேமெண்ட் சேவைகளை உங்களுக்கு வழங்கும் நோக்கத்திற்காக பில் பேமெண்ட் கணக்குத் தகவல்களையும் பில் விவரங்களையும் தொடர்ச்சியாக, உங்கள் சார்பாக அணுகவும், பயன்படுத்தவும், சேமிக்கவும் Google Payயை வெளிப்படையாக அங்கீகரிக்கிறீர்கள்.

பில் பேமெண்ட் கணக்குத் தகவல்களை வழங்க, பில் விவரங்களைப் பெற அல்லது மொபைல் ரீசார்ஜ்கள்/பணத்தைச் சேர்த்தல் உட்பட மூன்றாம் தரப்பின் சார்பாகப் பேமெண்ட்டுகளைச் செய்ய, பில் பேமெண்ட் சேவைகளைப் பயன்படுத்தினால் நீங்கள் அத்தகைய மூன்றாம் தரப்பின் ஒப்புதலைப் பெற்றிருப்பதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். மூன்றாம் தரப்பு பில் பேமெண்ட் கணக்குத் தகவல்களைத் தொடர்ந்து பயன்படுத்தவும் பில் பேமெண்ட் சேவைகளை Google Pay வழங்கும் நோக்கத்திற்காக மூன்றாம் தரப்பின் சார்பாகச் சம்பந்தப்பட்ட பில்லரிடமிருந்து பில் விவரங்களை அணுகவும் Google Payயை அனுமதிக்கத் தேவையான அனைத்து உரிமைகளும் அனுமதிகளும் உங்களிடம் இருப்பதாக ஒப்புக்கொள்கிறீர்கள். Google Pay மற்றும் உங்களுக்கு இடையே, மூன்றாம் தரப்பு எழுப்பும் எந்தவொரு கோரிக்கைக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்பதை ஏற்கிறீர்கள்.

தகவல்களின் துல்லியத்தன்மை. பில்லைப் பெறுவதற்கு மற்றும்/அல்லது பேமெண்ட் கோரிக்கையை அனுப்புவதற்கு (பில் பேமெண்ட் கணக்குத் தகவல்கள், பரிவர்த்தனைக்கான தொகை உட்பட) நீங்கள் வழங்கிய தகவல்களின் துல்லியத்தன்மைக்கு நீங்கள்தான் பொறுப்பு என்பதைப் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள்.

தங்கக் கணக்கை அமைத்தல். உங்கள் தங்கக் கணக்கை அமைக்க, இவற்றை நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும் (i) Googleளுக்குத் தேவைப்படக்கூடிய இருபடிச் சரிபார்ப்பு (ii) Google Payயில் Google கேட்கும் பதிவுச் செயல்முறைக்கு இணங்குதல்; (iii) பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியமாக்கப்படக்கூடிய KYC தேவைகளுக்கு இணங்குதல்.

Google Payயைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தங்கக் கணக்கு உங்கள் பெயரில் அமைக்கப்படுவதையும் உங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட தங்கக் கணக்குகள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறீர்கள்.

ஒட்டுமொத்த வாழ்நாள் பர்ச்சேஸ்களின் மதிப்பு ₹50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) அல்லது அதற்குமேல் இருந்தால் அல்லது ஒருவேளை நீங்கள் மேற்கொள்ளும் ஏதேனும் பரிவர்த்தனையின் மதிப்பு ₹50,000 (ரூபாய் ஐம்பதாயிரம்) அல்லது அதற்குமேல் இருந்தால், உங்கள் PAN கார்டின் நகலை வழங்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழலில், உங்கள் PAN கார்டின் உண்மையான நகலை நீங்கள் வழங்கியுள்ளீர்கள் என்றும் அது போலியானது அல்லது மாற்றம் செய்யப்பட்டது அல்ல என்றும் உறுதிசெய்து ஒப்புக்கொள்கிறீர்கள். கேஷ்பேக் தொகைக்கு வரிகள் செலுத்துவதற்கான எந்தக் கடமைக்கும் நீங்கள்தான் முழுப் பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

உங்கள் அடையாளம் சரியானதா என்பதை Google உறுதிசெய்துகொள்ள இத்தகைய விசாரணைகளை மேற்கொள்வதற்கு Googleளை அங்கீகரிக்கிறீர்கள். உங்களைப் பற்றிய ஏற்கெனவே உள்ள தகவல்களிலோ நீங்கள் வழங்கிய சரிபார்ப்பு ஆவணங்களிலோ மாற்றம் செய்யும் பட்சத்தில் அதை Googleளிடம் தெரிவிப்பது உங்கள் பொறுப்பு.

தங்கக் கணக்கை அமைக்கும்போது நியமனதாரரின் விவரங்களை Google உங்களிடம் கேட்கும். நீங்கள் இறந்துவிட்டால், சரியான ஆவணங்களை வழங்குவதன் மூலம் நியமனதாரர் உங்கள் தங்கக் கணக்கில் உள்ள தங்கத்தை உரிமைகோர அனுமதிக்கப்படுவார்.

6. பேமெண்ட் பங்கேற்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு வழங்குநர்கள்

பேமெண்ட் பங்கேற்பாளர்கள் உடனான தகவல்பரிமாற்றங்கள். Google Payயைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பரிவர்த்தனையைச் செயலாக்கும் நோக்கம், Google Pay சேவைகளை வழங்குதல் அல்லது அபாய மேலாண்மை மற்றும் மோசடி மதிப்பீடு நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உட்பட ஏதேனும் தகவல்களை வழங்கவோ பெறவோ பேமெண்ட் பங்கேற்பாளர்கள், ஏதேனும் மூன்றாம் தரப்பு வழங்குநர் அல்லது சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ள Googleளுக்கு அனுமதியளிக்கிறீர்கள். பேமெண்ட் பரிவர்த்தனையைச் செய்யும்போது அல்லது கேட்கும்போது, பிற பயனர்கள், வணிகர்கள், பில்லர்கள் ஆகியோருக்கு நீங்கள் அனுப்பும் எந்த மெசேஜையும் தேவைப்படும் பட்சத்தில் மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க Google பேமெண்ட் பங்கேற்பாளர்களுடன் பகிரக்கூடும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள்.

பேமெண்ட் பங்கேற்பாளர்களுக்கான விதிகளுடன் இணங்குதல். உங்கள் பேமெண்ட் வழிமுறைகளைச் செயல்படுத்த, பேமெண்ட் பங்கேற்பாளர்கள் சேவைகளைப் பயன்படுத்துவீர்கள் என்பதால், சம்பந்தப்பட்ட பேமெண்ட் பங்கேற்பாளர்களால் அவ்வப்போது வழங்கப்படும் விதிகள், வழிகாட்டுதல்கள், வழிமுறைகள், அறிவுறுத்தல்கள், கோரிக்கைகள் போன்றவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் அளித்து இணங்க ஏற்கிறீர்கள் ("பேமெண்ட் பங்கேற்பாளர்களுக்கான விதிகள்"). சமீபத்திய தகவல்கள் குறித்துத் தெரிந்து வைத்திருப்பதற்கும் மேற்கூறிய அனைத்துப் பேமெண்ட் பங்கேற்பாளர் விதிகளுடன் இணங்குவதற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதை ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள். Google அல்லது பேமெண்ட் பங்கேற்பாளர்களால் உங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டாயங்களுக்கு நீங்கள் இணங்கத் தவறினால், Google Payயில் உள்ள உங்கள் Google கணக்கை நாங்கள் இடைநிறுத்தலாம் அல்லது முடக்கலாம். சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு, பேமெண்ட் பங்கேற்பாளருக்கான விதிகள் உங்களுக்கும் சம்பந்தப்பட்ட பேமெண்ட் பங்கேற்பாளருக்கும் இடையிலானவை ஆகும். அத்தகைய பேமெண்ட் பங்கேற்பாளர்கள் செய்கின்ற அல்லது செய்யத் தவறுகின்ற எதற்கும் Google பொறுப்பாகாது.

மூன்றாம் தரப்பு வழங்குநர்களை Google பயன்படுத்துதல். கூடுதலாக, Google Pay மூலம் உங்களுக்குத் தயாரிப்புகளையோ சேவைகளையோ வழங்க மூன்றாம் தரப்பு வழங்குநர்களை Google ஏற்பாடு செய்திருக்கலாம் ("மூன்றாம் தரப்பு வழங்குநர்கள்"). இந்தத் தயாரிப்புகளையோ சேவைகளையோ பயன்படுத்த, இதுபோன்ற மூன்றாம் தரப்பு வழங்குநர்களின் கூடுதல் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் ஏற்க வேண்டியிருக்கலாம். மேலும் மூன்றாம் தரப்பு வழங்குநரின் கூடுதல் தேவைகளுக்கு உட்பட வேண்டியிருக்கலாம். இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமோ Google Pay சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமோ Google Payயில் அந்தத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பொருந்தும் எந்தவொரு மூன்றாம் தரப்பு வழங்குநரின் விதிமுறைகளையும் நீங்கள் ஏற்கிறீர்கள், இந்த விதிமுறைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம். சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு, மூன்றாம் தரப்பு வழங்குநரின் விதிமுறைகள் உங்களுக்கும் பொருந்தக்கூடிய மூன்றாம் தரப்பு வழங்குநருக்கும் இடையேயானவை மட்டுமே. இதில் Googleளுக்குத் தொடர்பு இல்லை. அத்தகைய மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் செய்கின்ற அல்லது செய்யத் தவறுகின்ற எதற்கும் Google பொறுப்பாகாது.

7. கட்டணங்கள்

பேமெண்ட் பங்கேற்பாளர்கள் அல்லது மூன்றாம் தரப்புக் கட்டணங்கள். நீங்கள் Google Payயைப் பயன்படுத்துவது தொடர்பாக, பேமெண்ட் பங்கேற்பாளர்கள் அல்லது மூன்றாம் தரப்பு வழங்குநர்களிடமிருந்து அணுகல் அல்லது தரவுக் கட்டணங்கள் உங்களுக்கு விதிக்கப்படக்கூடும். அத்தகைய கட்டணங்கள் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.

Google கட்டணங்கள். மொபைல் ரீசார்ஜ்கள் மட்டுமல்லாமல் சில பரிவர்த்தனைகளுக்கும் Google Pay சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் கட்டணங்கள் விதிக்கப்படலாம். ஒவ்வொரு பரிவர்த்தனையையும் நிறைவுசெய்வதற்கு முன், பொருந்தக்கூடிய கட்டணங்கள் ஏதேனும் இருந்தால் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். Google அதன் விருப்புரிமைப்படி கட்டணங்களைத் தீர்மானிக்கலாம் மற்றும் விதிக்கப்படும் கட்டணங்கள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய வரிகள் (ஏதேனும் இருந்தால்) அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

8. Google Pay சேவைகள் மூலம் பரிவர்த்தனைகளைச் செய்தல்

Google Pay சேவையைப் பயன்படுத்துவதற்கான வரம்புகள். Google Pay பயன்படுத்துவது குறித்த பொதுவான நடைமுறைகள் மற்றும் வரம்புகளை நாங்களோ பேமெண்ட் பங்கேற்பாளர்களோ உருவாக்கலாம். எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பும் கட்டுப்பாடும் இல்லாமல் Google Payயின் எந்த அம்சத்தையும் மாற்ற, இடைநிறுத்த அல்லது நிறுத்த எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. Google Pay சேவைகள் அல்லது எந்தவொரு Google Pay சேவை அம்சத்தின் செயல்பாட்டு நேரம், கிடைக்கும்நிலை ஆகியவையும் இதிலடங்கும். அறிவிப்பும் கடப்பாடும் இல்லாமல் சில அம்சங்களுக்கு வரம்புகளை விதிக்க அல்லது சேவையின் சில பகுதிகளுக்கான/சேவை முழுவதற்குமான அணுகலைக் கட்டுப்படுத்த எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. அனுப்புநருக்கோ பெறுநருக்கோ முன் அறிவிப்பு செய்யாமல் எந்தவொரு பேமெண்ட் பரிவர்த்தனையையும் நாங்கள் செயல்படுத்த மறுக்கக்கூடும். ஸ்பேம் அல்லது மோசடியான தகவல்தொடர்பு என்று நாங்கள் கருதும் எந்தவொரு பேமெண்ட் கோரிக்கைகள் உட்பட, Google Pay அல்லாத கணக்கிலிருந்து பயனர் பெறும் தகவல்தொடர்புகள் அனைத்தையும் தானாகவே தடுக்கும் முழு அதிகாரமும் எங்களுக்கு உள்ளது.

Google Payயில் உள்ள செயல்பாடுகள் தடையின்றி அல்லது பிழையின்றி இருக்கும் என்று நாங்கள் உத்திரவாதம் அளிக்கவில்லை. மேலும் எந்தவொரு சேவை இடையூறுகளுக்கும் (மின் தடைகள், சிஸ்டம் செயலிழப்புகள் அல்லது பேமெண்ட் பரிவர்த்தனைகளைப் பெறுதல், செயலாக்குதல், ஏற்றுக்கொள்ளுதல், நிறைவுசெய்தல், செட்டில்மெண்ட் செய்தல் போன்றவற்றைப் பாதிக்கக்கூடிய பிற இடையூறுகள் ஆகியவையும் இன்ன பிறவும்) நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

பரிவர்த்தனை வரம்புகள். ஒவ்வொரு பரிவர்த்தனையும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்புகளுக்கு உட்பட்டது. இவை Google, பயனர், பேமெண்ட் பங்கேற்பாளர்கள் அல்லது பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு நிர்ணயிக்கப்படலாம். கூடுதலாக, தொடர்புடைய கொள்கைகள் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் Google மற்றும் பேமெண்ட் பங்கேற்பாளர்கள் Google Payயில் உள்ள உங்கள் Google கணக்கில் பரிவர்த்தனைகளை (முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ) நிராகரிக்கலாம்/இடைநிறுத்தலாம்.

பரிவர்த்தனைப் பதிவுகள். உங்கள் பரிவர்த்தனைகள் தொடர்பான பதிவுகளை உங்கள் உரையாடல் பதிவுகளிலும் Google Pay ஆப்ஸில் உள்ள பரிவர்த்தனைப் பதிவுகளிலும் பார்க்கலாம். ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளின்படி, உங்கள் பரிவர்த்தனைச் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்து ஏதேனும் பிழைகள் அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கும், அத்தகைய நிகழ்வு குறித்து Googleளுக்கு எச்சரிக்கை செய்வதற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.

விர்ச்சுவல் கணக்கு எண்கள் மூலம் பரிவர்த்தனை செய்தல். Google Payயைப் பயன்படுத்தி விர்ச்சுவல் கணக்கு எண் பேமெண்ட் அல்லது டிரான்ஸிட் பரிவர்த்தனையைத் தொடங்கும்போது, உங்கள் விர்ச்சுவல் கணக்கு எண் குறித்த விவரங்களையும் தொடர்புடைய தகவல்களையும் பரிவர்த்தனை செய்யும் தரப்புக்கு Google அனுப்பலாம். இதன்மூலம் உங்கள் பேமெண்ட் முறையில் கட்டணம் விதிக்கப்படலாம். நீங்கள் இவற்றைச் செய்யும்போது விர்ச்சுவல் கணக்கு எண் பரிவர்த்தனை தொடங்கப்படக்கூடும்: கடைகளில் தட்டிச் செலுத்தும் முறையைப் பயன்படுத்துதல் அல்லது டிரான்ஸிட் சேவைகளில் NFC, பார்கோடுகள் அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்தல் அல்லது பிற காண்டாக்ட்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்; மூன்றாம் தரப்பினரின் இணையதளம் அல்லது ஆப்ஸில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது பேமெண்ட் விருப்பமாக “Google Pay” அல்லது “Google Pay மூலம் வாங்குக” என்பதைத் தேர்ந்தெடுத்தல்; அல்லது Google Assistant வழியாக வேறு சில ஆன்லைன் இடைமுகம் மூலம் மூன்றாம் தரப்புடன் பரிவர்த்தனை செய்தல். நீங்கள் ஓர் ஆன்லைன் பரிவர்த்தனையைத் தொடங்கும்போது உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட பில்லிங், ஷிப்பிங், மின்னஞ்சல் முகவரி போன்ற பிற தகவல்களையும் Google Pay பகிரலாம். பரிவர்த்தனையை நிறைவுசெய்வதற்குத் தேவையான இடங்களில் இவற்றைப் பகிரலாம்.

பேமெண்ட் முறை மற்றும் பிற விவரங்களை மூன்றாம் தரப்புக்கு அனுப்பிய பிறகு உங்களுக்கும் மூன்றாம் தரப்புக்கும் இடையிலான பரிவர்த்தனையில் இனி Google ஈடுபடாது. மேலும் இது உங்களுக்கும் மூன்றாம் தரப்புக்கும் இடையிலான பரிவர்த்தனை மட்டுமே, இதற்கும் Google/அதன் ஏதேனும் இணை நிறுவனங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள். பணத்தைத் திரும்பப்பெறுதல், புகார்கள் உட்பட விர்ச்சுவல் கணக்கு எண் பரிவர்த்தனைகளில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், மூன்றாம் தரப்பையோ உங்கள் பேமெண்ட் முறை வழங்குநரையோ (எடுத்துக்காட்டாக உங்கள் கட்டண முறை வழங்குநர்) நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

Google Payயில் விரிவாக வடிவமைக்கப்பட்ட பரிவர்த்தனை விவரங்களையும் உங்கள் சமீபத்திய பரிவர்த்தனைப் பதிவுகளையும் காட்ட, உங்கள் பேமெண்ட் முறை வழங்குநரிடமிருந்து பரிவர்த்தனையின் இருப்பிடத் தகவல் உட்பட பரிவர்த்தனைத் தகவல்களை Google Pay பெறலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

அனுமதிக்கப்படும் பரிவர்த்தனைகள். பொருட்கள் மற்றும் சேவைகளைப் பர்ச்சேஸ் செய்தல் உட்பட சட்டப்பூர்வமான மற்றும் உண்மையான நோக்கங்களுக்காகப் பணம் செலுத்தி பரிவர்த்தனையைச் செயல்படுத்த மட்டுமே நீங்கள் Google Pay சேவைகளைப் பயன்படுத்தலாம். எந்தவொரு சட்டவிரோதமான பொருட்கள் அல்லது சேவைகளின் விற்பனை/பரிமாற்றம், வேறு ஏதேனும் சட்டவிரோதப் பரிவர்த்தனை போன்றவற்றுடன் தொடர்புடைய பேமெண்ட் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த நீங்கள் Google Pay சேவையைப் பயன்படுத்தக்கூடாது.

ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகள், பேமெண்ட் பங்கேற்பாளருக்கான விதிகள், பொருந்தக்கூடிய சட்டம், Google Pay சேவைகளுக்குப் பொருந்தக்கூடிய பிற கொள்கைகள்/விதிகள் போன்றவற்றை மீறும் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த நீங்கள் Google Pay சேவையைப் பயன்படுத்த மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள். Google Pay பரிவர்த்தனைகள் தொடர்பாக உங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் மற்றும் கட்டாயங்களைப் புரிந்துகொள்ள Google Pay கொள்கைகளை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும். எந்தெந்த நோக்கங்களுக்காக Google Pay சேவைகளைப் பயன்படுத்தி பேமெண்ட்டுகளைச் செய்யவோ பெறவோ கூடாது என்பதை Google Pay கொள்கைகள் வரையறுக்கின்றன. Google Pay கொள்கைகள் மற்றும் அதன்கீழ் உள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்கத் தவறினால், உங்கள் பரிவர்த்தனை நிராகரிக்கப்படலாம் அல்லது Google Pay சேவையை நீங்கள் பயன்படுத்துவது இடைநிறுத்தப்படலாம் அல்லது முடக்கப்படலாம்.

நீங்கள் Google Pay சேவைகளின் ஒரு பகுதியாக பிசினஸ் பக்கங்களை ஹோஸ்ட் செய்தால், இந்தக் காரணங்களுக்காக அந்த பிசினஸ் பக்கங்களைப் பயன்படுத்தக்கூடாது: (a) சட்டவிரோத நோக்கங்களுக்காக அல்லது சட்டவிரோத செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தல்; (b) சட்டவிரோதமான/தடைசெய்யப்பட்ட தயாரிப்புகள், சேவைகளின் விற்பனையையோ பரிமாற்றத்தையோ ஊக்குவித்தல் அல்லது எளிதாக்குதல்; (c) Google Pay கொள்கைகள், பிசினஸ்களுக்கான Google Pay கொள்கைகள் அல்லது Play கொள்கையின் கீழ் ஏமாற்றக்கூடிய/தடைசெய்யப்பட்ட உள்ளடக்கம் அல்லது செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக இருத்தல்; (d) எந்த விதத்திலும் உங்கள் செயல்பாடு Googleளால் பரிந்துரைக்கப்படுகிறது எனக் கூறுதல்; (e) எந்த விதத்திலும் Googleளின் நற்பெயர் அல்லது நன்மதிப்பைச் சேதப்படுத்துதல்; அல்லது (f) எந்த விதத்திலும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்காமல் இருத்தல்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கொள்கைகளுடன் இணங்குவதை எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தும்படி Google எப்போது வேண்டுமானாலும் உங்களிடம் கேட்கலாம். மேலும் இதுபோன்ற எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்துதலை வழங்கும்போது அதனுடன் தொடர்புடைய துணை ஆவணங்களையும் அவ்வப்போது Googleளுக்கு வழங்க வேண்டும்.

9. Google Payயில் பில் பேமெண்ட் செய்தல்

பில் வழங்கல். Google Pay ஆப்ஸில் ஒரு பில்லரைப் பதிவுசெய்தவுடன் உங்களின் தற்போதைய மற்றும் எதிர்கால பில் விவரங்கள், தகுதிபெறும் ரீசார்ஜ் திட்டங்கள், அந்த பில்லர் அனுப்பும் ஸ்டேட்மெண்ட் (கிடைக்கும்போது) போன்றவற்றை உங்களால் பார்க்க முடியும். எந்தவொரு பேமெண்ட் செய்வதற்கு முன்பும் உங்கள் பில் விவரங்களைக் கவனமாகப் பார்ப்பதை உறுதிசெய்துகொள்ளவும். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், உங்கள் பில்லரைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் பில் பேமெண்ட்டுகளைத் திட்டமிடுதல். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பில்லரைப் பொறுத்து பேமெண்ட் செயலாக்கப்படுவதற்கான நேரம் மாறுபடும். Google Pay உங்களிடமிருந்து பேமெண்ட் தொடர்பான வழிமுறையைப் பெறும்போது உங்கள் நிதியளிக்கும் அக்கவுண்ட்டிலிருந்து பணம் டெபிட் செய்யப்பட்டு உங்கள் சார்பாக நீங்கள் தேர்ந்தெடுத்த பில்லருக்குப் பணம் அனுப்புவதற்கான வழிமுறைகளைப் பேமெண்ட் அமைப்பு வழங்குநர்களுக்கு அனுப்ப எங்களை அங்கீகரிக்கிறீர்கள். பேமெண்ட்டுகள் அந்த பில்லர்கள் மற்றும் பேமெண்ட் பங்கேற்பாளர்களின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டவை. இதற்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்: (i) பில்லரால் பேமெண்ட் செயலாக்கத்தில் தாமதங்கள் ஏற்படுதல்; (ii) பரிவர்த்தனைகளில் தாமதம், தோல்வி, ரிவர்ஸல் போன்றவை ஏற்படுதல்; அல்லது (iii) சரியான நேரத்தில் பேமெண்ட் தேதிகளை நீங்கள் திட்டமிடத் தவறுதல். தாமதமாகப் பேமெண்ட் செய்வதால் ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். பில்லரால் விதிக்கப்படும் தாமதக் கட்டணத்திற்கான வரியும் பிற அபராதமும் இதிலடங்கும்.

பில் நினைவூட்டல்கள். பில் பேமெண்ட் செய்வது தொடர்பான பதிவுகள் உங்களிடம் இருந்தாலும் உங்கள் பில்லைச் செலுத்துவதற்கான நினைவூட்டல்களையும் Google Pay உங்களுக்கு அனுப்பக்கூடும். உங்கள் பில் பேமெண்ட்டுகளைச் சரியான நேரத்தில் திட்டமிட இது உதவும்.

பேமெண்ட் பதிவுகள். உங்கள் பில் பேமெண்ட் கோரிக்கைகள் குறித்த தகவல்களை Google Pay ஆப்ஸில் அணுகலாம். பில்லர் வழங்கிய அனைத்து ஸ்டேட்மெண்ட்டுகள் அல்லது பேமெண்ட் பதிவுகளை எப்போதும் உங்கள் பில் பேமெண்ட் கோரிக்கைகளுடன் சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

பிரீபெய்டு ரீசார்ஜ்கள். உங்கள் பிரீபெய்டு மொபைல், டேட்டா அல்லது பிற கணக்குகளை ரீசார்ஜ் செய்ய Google Pay உதவுகிறது. உண்மையில் மொபைல், டேட்டா அல்லது பிற சேவைகள் அனைத்தும் பிரீபெய்டு சேவை வழங்குநர்களால் (தொலைத்தொடர்பு சேவை வழங்குநரைப் போன்று) வழங்கப்படுகின்றன. அதாவது உங்கள் கணக்கு தொடர்பான சேவைகள் இவர்களாலோ ("பிரீபெய்டு சேவை வழங்குநர்கள்") அல்லது இவர்களின் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களால் மட்டுமே வழங்கப்படுகின்றன, Google Payயால் அல்ல. பிரீபெய்டு சேவை வழங்குநர்களால் வழங்கப்படக்கூடிய திட்டத்திலிருந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடுப்பதற்கும், அதன் விதிமுறைகளுடன் இணங்குவதற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதை இதன்மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். Google Payயில் வழங்கப்படும் திட்டங்கள் குறிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். திட்டங்கள் சமீபத்தியவையாக இல்லாமல் மாற்றப்பட்டிருக்கலாம். பரிவர்த்தனை செய்வதற்கு முன், சமீபத்திய திட்டங்கள் மற்றும் விவரங்களுக்கு உங்கள் பிரீபெய்டு சேவை வழங்குநரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தற்காலிக பில் பேமெண்ட்டுகள். பில் பேமெண்ட் அல்லது ரீசார்ஜ் செய்வதற்கு ஒரு தற்காலிகத் தொகையை டைப் செய்வதற்கு நீங்கள் தேர்வுசெய்யலாம், இருப்பினும் அந்தத் தொகையை ஏற்பது பில்லரின் தனிப்பட்ட விருப்பமாகும். பேமெண்ட் செய்யவோ உங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்யவோ நீங்கள் டைப் செய்த விவரங்களின் துல்லியத்தன்மைக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். மேலும், எந்தவொரு பில்லரும் ரீசார்ஜ் அல்லது பிற பில் பேமெண்ட்டைச் செயல்படுத்தும்போது ஏதேனும் தவறு ஏற்பட்டாலோ பில்லர் வழங்கும் சேவையின் தரம் தொடர்பாக ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ Google Pay பொறுப்பேற்காது என்பதையும், அது தொடர்பான புகார் எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கும் பில்லருக்கும் இடையே நேரடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

பணத்தைத் திரும்பப்பெறுதல். மொபைல் ரீசார்ஜ் உட்பட பில் பேமெண்ட்டுக்கான அல்லது பில் பேமெண்ட்/ரீசார்ஜ் வழங்கப்படாமல் உங்கள் கணக்கிலிருந்து டெபிட் செய்யப்பட்ட எந்தவொரு பேமெண்ட்டுக்கான பணத்தைத் திரும்பப்பெறுவது பில்லரின் விதிமுறைகள் அல்லது கொள்கைகளின்படி மட்டுமே செய்யப்படும். மேலும் இதற்கு Google Pay பொறுப்பாகாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

10. Google Payயில் உள்ள கடன் வழங்கும் சேவைகள்

கடன் வசதி தொடர்பான ஆஃபர்கள். கடன் வழங்கும் மூன்றாம் தரப்பினர், நீங்கள் தகுதிபெறும் கடன் வசதிகள் தொடர்பான ஆஃபர்களை உங்களுக்கு அனுப்பலாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். கடன் வசதிக்கான உங்கள் தகுதிநிலை (விதிமுறைகள் மற்றும் மொத்தக் கடன் தொகை உட்பட) யாவும் கடன் வழங்கும் மூன்றாம் தரப்பினரால் முடிவு செய்யப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இதுபோன்ற ஆஃபரின் உள்ளடக்கத்திற்கோ கடன் வசதிக்கோ Google எந்த வகையிலும் பொறுப்பாகாது. Google இணைந்து பணிபுரிகின்ற கடன் வழங்கும் மூன்றாம் தரப்பினர்களையும் அவர்களின் சேவை விதிமுறைகளையும் இங்கே பார்க்கலாம்:

- DMI finance

- Aditya Birla Finance Limited

- Bajaj Finance

- Axis Bank

கடன் வழங்கும் சேவைகளுக்கு விண்ணப்பித்தல். கடன் வழங்கும் மூன்றாம் தரப்புகளால் உங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் ஆஃபரை ஏற்றுக்கொண்டு Google Payயில் கடன் வழங்கும் மூன்றாம் தரப்பால் வழங்கப்பட்ட கடன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். தொடர்புடைய மூன்றாம் தரப்புக் கடன் வழங்குநரைப் பொறுத்து, உங்களுக்கு விருப்பமான கடன் வசதித் தொகையையும் சமமான மாதாந்திரத் தவணைகள் ("EMI - Equated Monthly Instalments") திட்டத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். மேலும், உங்கள் பெயர், முகவரி, ஃபோன் எண், IP முகவரி, கடன் தொகை, நீங்கள் தேர்ந்தெடுத்த EMI திட்டம் & அதன் தவணைக் காலம், கடனுக்கான நோக்கம் போன்றவை உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றையும், கடன் வழங்கும் மூன்றாம் தரப்புக்குத் தேவைப்படும் பிற தகவல்களையும் நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம்.

Google Pay ஆப்ஸில் கடன் வழங்கும் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் கடன் வழங்கும் மூன்றாம் தரப்பினர்களிடம் உள்ள உங்கள் KYC விவரங்கள் சமீபத்தியவையாகவும் துல்லியமானவையாகவும் இருப்பதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும்.

கடன் வழங்கும் மூன்றாம் தரப்பிடமிருந்துதான் கடன் வசதிச் சேவைகளைப் பெறுகிறீர்கள் என்பதையும், இந்த நோக்கத்திற்காக கடன் வழங்கும் மூன்றாம் தரப்புடன் ஒப்பந்தத்தில் இருப்பீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். கடன் வசதியை உங்களுக்கு வழங்குவது அல்லது கடன் ஒப்பந்தத்தில் உள்ளவற்றை முறையாகச் செய்வது தொடர்பான விஷயங்களில் Google ஒருபோதும் ஈடுபடாது அல்லது பொறுப்பேற்காது.

கட்டணங்கள் மற்றும் கட்டணம் விதித்தல். கடன் வசதி மற்றும் ஸ்டாம்ப் வரிக் கட்டணங்களை உடனடியாகச் செயல்படுத்துவதற்கு கடன் வழங்கும் மூன்றாம் தரப்பு உங்களுக்குச் சேவைக் கட்டணத்தை விதிக்கலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இது உங்கள் கடன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு, கடன் வசதித் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

உங்கள் கடன் விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்துப் பார்த்தல். விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து சமர்ப்பிக்கும் முன் வட்டி விகிதம், EMI திட்டம், கடன் வசதி தொடர்பான பிற கட்டணங்கள் என அனைத்தையும் கவனமாகப் படித்துப் பார்த்து கடன் ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். கடன் வசதிக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் அல்லது உங்களுக்கு கடன் வழங்கும் மூன்றாம் தரப்பு வழங்கிய கடன் வசதித் தகவல்கள் அனைத்தையும் படித்துப் பார்த்து ஏற்கிறீர்கள் என்பதை உறுதிசெய்யவும். இறுதியான EMI தொகை, சேவைக் கட்டணங்கள், பொருந்தக்கூடிய ஸ்டாம்ப் வரி ஆகியவை கடன் வழங்கும் மூன்றாம் தரப்பால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நினைவில்கொள்ளவும். விண்ணப்பச் செயல்முறையின்போது அல்லது கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றுதல் தொடர்பாக நீங்கள் உறுதிசெய்தவற்றில் ஏதேனும் பிழையோ முரண்பாடோ இருந்தால் அதற்கு Google பொறுப்பாகாது. ஏதேனும் முரண்பாடு இருந்து அதைத் திருத்த விரும்பினால், கடன் வழங்கும் மூன்றாம் தரப்பை நீங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

கடன் வசதி வழங்கல். உங்கள் விண்ணப்பம் கடன் வழங்கும் மூன்றாம் தரப்பால் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் Google Pay ஆப்ஸில் கடன் வசதிக்கான ரசீதை ("கடன் வசதி ரசீது") நீங்கள் பார்க்கலாம். கடன் வசதிக்கான ரசீதில் பெயர், முகவரி, விண்ணப்பத் தேதி, கடன் வசதித் தொகை, வட்டி விகிதம், தவணைக் காலம், EMIகளின் எண்ணிக்கை, கட்டணங்கள் மற்றும் கடன் விண்ணப்பச் செயல்முறையின்போது நீங்கள் வழங்கிய அல்லது உறுதிப்படுத்திய பிற தகவல்கள் இருக்கலாம். கடன் வசதிக்கான ரசீதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், கடன் வழங்கும் மூன்றாம் தரப்பைத் தொடர்புகொள்ள வேண்டும்.

கடன் வசதித் தொகையை வழங்குதல். கடன் வசதித் தொகை, கடன் வழங்கும் மூன்றாம் தரப்பிடம் உள்ள உங்கள் அக்கவுண்ட்டில் நேரடியாகக் கிரெடிட் செய்யப்படும்.

EMI பேமெண்ட் தொடர்பான நினைவூட்டல்கள். உங்கள் கடன் வழங்கும் மூன்றாம் தரப்பு Google Pay ஆப்ஸ் மூலம் EMI செலுத்துவதற்கான நினைவூட்டல்கள் உட்பட கடன் வசதி தொடர்பான தகவல்தொடர்புகளை உங்களுக்கு அனுப்பலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

கடன் வசதித் தொகையைத் திருப்பிச் செலுத்துதல். EMI செலுத்த வேண்டிய தேதியில், கடன் வழங்கும் மூன்றாம் தரப்புடன் தொடர்புடைய உங்கள் அக்கவுண்ட்டிலிருந்து EMI பேமெண்ட் தொகை நேரடியாக டெபிட் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் போதிய பணம் இருத்தல், கடன் ஒப்பந்தத்தில் உள்ளவற்றை நிறைவேற்ற முடியாத காரணத்தால் அல்லது EMI தவணைகளைச் செலுத்தப் போதிய பணம் இல்லாமல் இருப்பதால் ஏதேனும் அபராதம் விதிக்கப்படுதல் போன்றவற்றுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். கடன் வழங்கும் மூன்றாம் தரப்புடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்த விதிமுறைகளின்படி வட்டி விதிக்கப்படுதலும் இதிலடங்கும். கடன் வழங்கும் மூன்றாம் தரப்புடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்த விதிமுறைகளின்படி வட்டி விதிக்கப்படுதலும் இதிலடங்கும்.

Google Payயில் கடன் வசதிச் சேவைகளைப் பெறுவதன் மூலம், Google Payயில் உங்களுக்குச் சேவைகளை வழங்கும் நோக்கத்திற்காக உங்கள் சார்பில் கடன் வசதிப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து அணுக, பயன்படுத்த மற்றும் சேமிக்க Google Payயை வெளிப்படையாக அங்கீகரிக்கிறீர்கள்.

11. Google Payயில் உள்ள கிரெடிட் கார்டு சேவைகள்

தகுதிபெறும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான ஆஃபர்கள் மற்றும் தொடர்புடைய ஆஃபர்கள்/சேவைகளை Google அல்லது கிரெடிட் நிறுவனங்கள் உங்களுக்கு அனுப்பலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். கிரெடிட் கார்டுக்கான உங்கள் தகுதிநிலை கிரெடிட் நிறுவனத்தின் சொந்த விருப்புரிமையின்படி இருக்கும் என்பதையும், இவை பேங்க் உருவாக்கிய வழக்கமான நடைமுறைகள் மற்றும் கடனுக்கான காப்பீட்டு நிபந்தனைகளைப் பொறுத்தது என்பதையும் கிரெடிட் நிறுவனம் அதன் சொந்த விருப்புரிமையின்படி இவற்றை அனுமதிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பித்தல். கிரெடிட் நிறுவனத்தால் உங்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, Google Payயில் கிரெடிட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் பெயர், முகவரி, ஃபோன் எண், வருவாய் வரம்பு, வேலைத் தகவல் போன்றவை உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றையும், கிரெடிட் நிறுவனத்திற்குத் தேவைப்படக்கூடிய பிற தகவல்களையும் நீங்கள் வழங்க வேண்டியிருக்கலாம். Google Pay ஆப்ஸில் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது கிரெடிட் நிறுவனங்களிடம் உள்ள உங்கள் KYC விவரங்கள் சமீபத்தியவையாகவும் துல்லியமானவையாகவும் இருப்பதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும்.

உங்கள் கிரெடிட் நிறுவனத்திடமிருந்து கிரெடிட் கார்டைப் பெறுகிறீர்கள் என்பதையும், இந்த நோக்கத்திற்காக அந்தக் கிரெடிட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இருப்பீர்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்களுக்குக் கிரெடிட் கார்டு வழங்குவது தொடர்பான விஷயங்களில் Google ஒருபோதும் தலையிடாது அல்லது பொறுப்பேற்காது.

உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தைக் கவனமாகப் படித்துப் பார்த்தல். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன், உங்களுக்கும் உங்கள் கிரெடிட் நிறுவனத்திற்கும் இடையிலான கிரெடிட் கார்டு ஒப்பந்தத்தின்படி உங்கள் கிரெடிட் கார்டை நிர்வகிக்கும் அனைத்து விதிமுறைகளையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். விண்ணப்பச் செயல்முறையின்போது நீங்கள் உறுதிசெய்த தகவல்களில் ஏதேனும் பிழையோ முரண்பாடோ இருந்தால் அதற்கு Google பொறுப்பேற்காது. மேலும் கிரெடிட் கார்டை வழங்குவதற்கும் கிரெடிட் நிறுவனத்தால் வழங்கப்படும் கிரெடிட் கார்டு தொடர்பான எந்தவொரு தகவலின் துல்லியத்தன்மைக்கும் பொறுப்பேற்காது. உங்கள் கிரெடிட் கார்டு தொடர்பாக ஏதேனும் முரண்பாடு இருந்து அதைத் திருத்த அல்லது கிரெடிட் கார்டை மூட/முடக்க, கிரெடிட் நிறுவனத்துடனான உங்கள் கிரெடிட் கார்டு ஒப்பந்த விதிமுறைகளின்படி கிரெடிட் நிறுவனத்தை நீங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

Google Payயில் கிரெடிட் கார்டு சேவைகளைப் பெறுவதன் மூலம், Google Payயில் உங்களுக்குச் சேவைகளை வழங்கும் நோக்கத்திற்காக உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பம் தொடர்பான தகவல்களை அணுக, பயன்படுத்த மற்றும் சேமிக்க Google Payயை வெளிப்படையாக அங்கீகரிக்கிறீர்கள். மேலும் தகுதிபெறும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான ஆஃபர்கள் மற்றும் தொடர்புடைய ஆஃபர்கள்/சேவைகளை உங்களுக்கு அனுப்புவதும், மோசடிப் பகுப்பாய்வு மற்றும் மோசடிக் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு உதவுவதும் இதிலடங்கும்.

12. கிரெடிட் அறிக்கை

அங்கீகரித்தல்: Google Payயில் உங்கள் தகவல்களை வழங்கி 'தொடர்க' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் இவற்றைச் செய்கிறீர்கள்

  1. கிரெடிட் தகவல்களைக் கேட்டுள்ளீர்கள்;
  2. உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்கும், Google Payயில் நீங்கள் வழங்கிய விவரங்களை TransUnion CIBIL Limited (“TUCIBIL”, ஒரு கிரெடிட் பீரோ) உடன் அவ்வப்போது கேட்டுக்கொண்டபடி பகிர்வதற்கும், இறுதிப் பயனரை அனுமதிக்கும் நோக்கத்திற்காக உங்கள் கிரெடிட் தகவல்களைப் பெறுவதற்கும் Googleளை உங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளீர்கள்;
  3. a) Google Payயில் உங்கள் கணக்கு முடக்கப்படும் வரை, b) இறுதிப் பயனர் அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்காக உங்கள் கிரெடிட் தகவல்கள் தேவைப்படும் வரை, c) 6 மாதக் குறுகிய காலம் வரை, d) Google Payயில் உங்கள் கிரெடிட் தகவல்களைச் சேமிக்க/பயன்படுத்துவதற்கான ஒப்புதலை நீங்கள் திரும்பப்பெறும் வரை (முதலில் வருவது பொருந்தும்) உங்கள் கிரெடிட் தகவல்களைத் தக்கவைத்து சேமிக்க Googleளை அங்கீகரித்துள்ளீர்கள்; மற்றும்
  4. கிரெடிட் தகவல்களில் எந்தவொரு மாற்றங்களும் செய்யாமல், Google Pay ஆப்ஸில் அவற்றை இன்னும் சிறந்த முறையிலும் பயனருக்கேற்றதாகவும் அமைக்க கிரெடிட் தகவல்களை மறுவரிசைப்படுத்தி வகைப்படுத்துவதற்கு Googleளை அங்கீகரித்துள்ளீர்கள்.

கிரெடிட் ஸ்கோர் சிமுலேட்டர்: பயனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து அனுமானத்தின் அடிப்படையிலான ஸ்கோர் இண்டிகேட்டராக மட்டுமே கிரெடிட் ஸ்கோர் சிமுலேட்டர் பயன்படுத்தப்பட வேண்டும். கிரெடிட் ஸ்கோர் சிமுலேட்டர் ஒரு TUCIBIL தயாரிப்பு என்பதையும், கிரெடிட் ஸ்கோர் சிமுலேட்டரின் செயல்பாட்டிலோ அதிலிருந்து பெறப்பட்ட சிமுலேட்டட் கிரெடிட் ஸ்கோரிலோ Google எந்தப் பங்கையும் வகிக்காது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

பொறுப்புதுறப்பு:

(i) உங்கள் கிரெடிட் தகவல்களைக் காட்டுவதற்கான தொழில்நுட்பப் பிளாட்ஃபார்மையும், TUCIBIL வழங்கும் கிரெடிட் ஸ்கோர் சிமுலேட்டரையும் Google Pay வழங்குகிறது. மேலும் உங்கள் கிரெடிட் தகவலையும் சிமுலேட்டட் ஸ்கோரையும் கட்டுப்படுத்தாது. கிரெடிட் தொடர்பான முடிவுகளை எடுக்க சிமுலேட்டட் ஸ்கோரைப் பயன்படுத்தக்கூடாது, மேலும் இதைக் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

(ii) உங்கள் கிரெடிட் அறிக்கையில் உள்ள எந்தவொரு தகவலும் துல்லியமற்றதாக இருந்து உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதித்தால் அதுகுறித்து TUCIBIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாகப் புகாரளிக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

13. Google Payயில் உள்ள UPI Lite சேவைகள்

UPI Lite என்பது NPCIயால் செயல்படுத்தப்பட்டு Google Pay ஆப்ஸில் இயக்கப்படும் சேவையாகும். இதன்மூலம் உங்கள் UPI Lite கணக்கை (“UPI Lite”) பயன்படுத்தி, கீழே உள்ள 'பயன்பாடு மற்றும் செட்டில்மெண்ட்' பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பு வரை, UPI பின்னை உள்ளிடாமல் குறைந்த தொகையிலான பேமெண்ட் பரிவர்த்தனைகளைச் செய்யலாம். UPI Lite என்பது ஒரு சேவையாக மட்டுமே வழங்கப்படுகிறது, Google Pay ஆப்ஸில் உள்ள புதிய கணக்காகவோ வாலட்டாகவோ அல்ல. உங்கள் மொபைல் சாதனத்தை மாற்றினாலும் நீங்கள் அதே மொபைல் எண்ணையும் பேங்க் அக்கவுண்ட்டையும் பயன்படுத்தினால், புதிய சாதனத்திலிருந்து உங்கள் UPI Lite அக்கவுண்ட் பேலன்ஸைத் தொடர்ந்து அணுக முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

பதிவு செய்தல் மற்றும் ஏற்றுதல்: உங்கள் சுயவிவர ஐகானைக் கிளிக் செய்து, பேமெண்ட் முறைகள் பக்கத்தில் UPI Liteடை அமைப்பதன் மூலம் UPI Liteடில் பதிவு செய்யலாம். பதிவு செய்தலின் ஒரு பகுதியாக, UPI Liteடை ஆதரிக்கும் (“பேங்க் அக்கவுண்ட்”) உங்கள் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட் மூலம் UPI Lite கணக்கில் 2,000 ரூபாய் வரை சேர்க்கும்படி கேட்கப்படுவீர்கள். உங்கள் UPI பின்னை டைப் செய்து அது சரிபார்க்கப்பட்டு UPI Lite கணக்கில் பணம் சேர்க்கப்பட்டதும் UPI Liteடுக்கான பதிவு முடிந்ததாகக் கருதப்படும். UPI Liteடை ஆதரிக்கும் ஒரே ஒரு பேங்க் அக்கவுண்ட்டை மட்டுமே Google Pay ஆப்ஸில் UPI Lite உடன் இணைக்கப் பயன்படுத்த முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

பயன்பாடு மற்றும் செட்டில்மெண்ட்: உங்கள் UPI Lite கணக்கைப் பயன்படுத்தி ஒரு நபர் அல்லது வணிகருக்கு அதிகபட்சமாக₹500 பணப்பரிவர்த்தனை செய்யலாம். UPI Lite கணக்கின் மொத்தத் தினசரிப் பயன்பாட்டு வரம்பு₹4000 ஆகக் கட்டுப்படுத்தப்படும், இதனால் அதிகபட்சமாக ₹2000 ஒரு நாளைக்கு இரண்டு முறை சேர்க்கப்படலாம். இவற்றை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்:

  1. மேலே குறிப்பிட்டுள்ள பயன்பாட்டு வரம்புகளை NPCI அதன் சொந்த விருப்பப்படி எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் அவ்வப்போது மாற்றலாம்.
  2. UPI Lite கணக்கு என்பது 'சாதனத்தில்' மட்டுமே காட்டப்படும் விர்ச்சுவல் பேலன்ஸ் ஆகும். மேலும் இது உங்களால் ஒதுக்கப்பட்ட UPI Lite பேலன்ஸின் பிரதிபலிப்பே. UPI Lite கணக்கில் உள்ள பேலன்ஸுக்கு எந்த வட்டியும் வழங்கப்படாது.
  3. உங்கள் UPI Lite கணக்குடன் தொடர்புடைய உண்மையான பணம்/நிதி உங்கள் வழங்கும் பேங்க்கின் விருப்பப்படி பாதுகாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது;
  4. UPI Lite கணக்கை டெபிட் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், கிரெடிட் தொடர்பான அனைத்துப் பரிவர்த்தனைகளும் (பணத்தைத் திரும்பப்பெறுதல் போன்றவை) உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் செயலாக்கப்படும்.
  5. பியர்-டு-பியர் சேகரிப்புக் கோரிக்கைகள், தானாகப் பணம் செலுத்துதல் மற்றும் சர்வதேசப் பேமெண்ட் பரிவர்த்தனைகளுக்கு UPI Lite கணக்கைப் பயன்படுத்த முடியாது.
  6. ₹500 வரையிலான எந்தவொரு பேமெண்ட் பரிவர்த்தனைக்கும் (மொத்தத் தினசரிப் பயன்பாட்டு வரம்பு ₹4000க்கு உட்பட்டது), உங்கள் UPI Lite கணக்கில் போதுமான நிதி இருந்தால் இயல்பாகவே உங்கள் UPI Lite கணக்கு பயன்படுத்தப்படும்.

பதிவுநீக்குதல்: Google Pay ஆப்ஸில் இருந்து எந்த நேரத்திலும் UPI Lite சேவைகளை முடக்கலாம். முடக்கப்பட்டவுடன், பயன்படுத்தப்படாத UPI Lite பேலன்ஸ் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் உங்கள் வழங்கும் பேங்க் மூலம் கிரெடிட் செய்யப்படும். இவற்றை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்:

  1. UPI Lite கணக்கில் ஏற்கெனவே பேலன்ஸ் இருந்து உங்கள் பேங்க் அக்கவுண்ட் மூடப்பட்டால், உங்கள் UPI Lite கணக்கில் ஏற்கெனவே உள்ள பேலன்ஸை நீங்கள் செலவிட முடியும்.
  2. உங்கள் மொபைல் சாதனத்தை மாற்றினாலோ சாதனம் தொலைந்துவிட்டாலோ, புதிய சாதனத்திற்குப் புதிய UPI Lite கணக்கு உருவாக்கப்படும் என்பதால், UPI Lite கணக்கில் இருந்த பேலன்ஸை உங்கள் புதிய சாதனத்தில் பெற முடியாது. உங்கள் மொபைல் சாதனத்தை மாற்றினால், பழைய சாதனத்திலிருந்து உங்கள் UPI Lite கணக்கை முடக்கி, UPI Lite பேலன்ஸை உங்கள் பேங்க் அக்கவுண்ட்டிற்கு மாற்றுவதை நீங்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். உங்கள் பழைய மொபைல்/சாதனத்திலிருந்து UPI LITEடை முடக்கத் தவறினால், உங்கள் வழங்கும் பேங்க்கால் உங்கள் UPI LITE பேலன்ஸை உங்கள் அக்கவுண்ட்டிற்கு மாற்ற முடியாது. இருப்பினும் நீங்கள் அதை, வழங்கும் பேங்க்கிடம் தெரிவித்தால் வழங்கும் பேங்க் உங்கள் கணக்கில் உள்ள UPI LITE பேலன்ஸைத் திருப்பியளிப்பதற்கான சிறந்த வழிகளை முயன்று பார்க்கும். மேலே கூறப்பட்ட சூழ்நிலைகளில் ஏதேனுமொன்று நடந்தால், உங்கள் UPI Lite கணக்கில் ஏற்படும் பண இழப்புக்கு Google, NPCI அல்லது வழங்கும் பேங்க் பொறுப்பேற்காது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

சார்ஜ்பேக்: UPI Lite பரிவர்த்தனையின் கீழ் செய்யப்படும் எந்தவொரு பணத்தைத் திரும்பப்பெறுதல் அல்லது சார்ஜ்பேக் கோரிக்கைகளும் இந்த Google Pay விதிமுறைகளில் உள்ள பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் சார்ஜ்பேக் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதே செயல்முறையையே பின்பற்றும்.

UPI Lite கணக்கிற்கான பாதுகாப்பு:

  1. உங்கள் Google Pay ஆப்ஸ் மற்றும் UPI Lite பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய பிற விவரங்களின் ரகசியத்தன்மையைக் காப்பது உங்கள் பொறுப்பாகும். மேலும் UPI Lite இயக்கப்பட்டிருக்கும் மொபைல்கள் மூலம் செய்யப்படும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள்.
  2. UPI Lite பயன்படுத்தி உங்கள் Google Pay கணக்கிலிருந்து செய்யப்படும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கும் NPCI/Google பொறுப்பாகாது.
  3. Google Pay ஆப்ஸில் உங்கள் UPI Lite கணக்கைப் பாதுகாக்கத் தவறியதாலோ UPI Lite விதிமுறைகளுக்கு இணங்காததாலோ ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் சேதத்திற்கும் NPCI/Google உங்களுக்காகவோ வேறொரு நபருக்காகவோ பொறுப்பேற்காது.

இந்த UPI Lite விதிமுறைகளில் உள்ள எந்தவொரு முரண்பாட்டையும் பொருட்படுத்தாமல் NPCI/Google அதன் விருப்புரிமைப்படி எப்போது வேண்டுமானாலும், உங்களுக்கோ வேறொரு நபருக்கோ எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் அதற்கான கட்டாயமும் இல்லாமல், உங்கள் UPI Lite இயக்கத்தை மறுத்தல், Google Pay ஆப்ஸில் உங்கள் பயனர் கணக்கை அணுகுவதை இடைநிறுத்துதல் அல்லது முடக்குதல் ஆகியவற்றைச் செய்வதற்கு முழு அதிகாரம் உள்ளது.

14. UPI மூலம் RuPay கிரெடிட் கார்டு

உங்கள் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட்டை Google Payயில் இணைப்பது போலவே, வணிகர்களுக்குப் பேமெண்ட்டுகளைச் செய்வதற்கான மாற்று முறையாக உங்கள் RuPay கிரெடிட் கார்டை Google Payயில் இணைக்கலாம். உங்கள் RuPay கிரெடிட் கார்டை இணைக்க, பேமெண்ட் முறைகள் பக்கத்தில் RuPay கிரெடிட் கார்டையும், உங்களிடம் ஏற்கெனவே கிரெடிட் அக்கவுண்ட் உள்ள தொடர்புடைய பேங்க்கையும் தேர்வுசெய்ய வேண்டும். அதன்பிறகு UPI பின்னை (MPIN) உருவாக்க, வழங்கும் பேங்க்குடன் உங்கள் RuPay கிரெடிட் கார்டின் கடைசி 6 இலக்கங்களைச் செல்லுபடியாகும் விவரங்களுடன் (MMYY வடிவத்தில்) உறுதிப்படுத்த வேண்டும். வணிகர்களுக்குப் பணம் செலுத்த Google Pay ஆப்ஸில் உங்கள் கிரெடிட் அக்கவுண்ட்டைப் பேமெண்ட் முறையாகத் தேர்வுசெய்யும் ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க MPIN பயன்படுத்தப்படும். உங்கள் RuPay கிரெடிட் கார்டை Google Payயில் இணைத்த பிறகு UPI QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலமும் உங்கள் MPINனைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதன் மூலமும் வணிகர்களுக்குப் பணம் செலுத்த குறிப்பிட்ட கிரெடிட் கார்டைத் தேர்வுசெய்யலாம். தெளிவுபடுத்த, இந்தச் செயல்பாடு UPIயில் RuPay கிரெடிட் கார்டு மூலம் பேமெண்ட்டுகளை ஏற்கும் வணிகர்களுக்கான பேமெண்ட்டுகளுக்கு மட்டுமே வரம்பிடப்பட்டுள்ளது. வணிகரிடம் பணம் எடுப்பது, பியர்-டு-பியர் பேமெண்ட்டுகள், P2PM, கார்டு-டு-கார்டு பேமெண்ட்டுகள் ஆகியவை தொடர்பான பரிவர்த்தனைகள் இந்தச் செயல்பாட்டின் மூலம் அனுமதிக்கப்படாது.

பரிவர்த்தனை வரம்பு. இந்தச் செயல்முறையின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை வழக்கமான UPI பரிவர்த்தனை வரம்புகளையே பின்பற்றும், இது பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவ்வப்போது மாறக்கூடும்.

வழக்குகள். RuPay கிரெடிட் அக்கவுண்ட்டைப் பயன்படுத்திச் செய்யப்படும் பேமெண்ட் பரிவர்த்தனைகளால் ஏற்படும் அனைத்துக் கோரிக்கைகளும், கீழேயுள்ள இந்த விதிமுறைகளில் புகார் பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதே செயல்முறையையே பின்பற்றும்.

15. UPI Circle

Google Payயில் UPI Circle (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம். UPI Circle அம்சத்தை அணுகுவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன் UPI Circle விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும். சூழல் வேறுவிதமாகக் குறிப்பிடாவிட்டால், பின்வரும் வார்த்தைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.

"UPI Circle" என்பது ஒரு முதன்மைப் பயனர் தனது UPI ஐடியுடன் இரண்டாம்நிலைப் பயனரின் ஐடியை இணைக்கவும், முழு அல்லது பகுதியளவு பொறுப்பை ஒப்படைப்பதன் அடிப்படையில் UPI பேமெண்ட்/பரிவர்த்தனைகளைச் செய்யவும் அங்கீகாரம் அளிக்கும் அம்சமாகும். முழுப் பொறுப்பும் இருக்கும்பட்சத்தில், முதன்மைப் பயனர் அத்தகைய பேமெண்ட்டுகள்/பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான அதிகபட்ச வரம்பை இரண்டாம்நிலைப் பயனருக்கு ஒதுக்கலாம் (அதாவது, மேற்கூறிய UPI பேமெண்ட்டுகள்/பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு முதன்மைப் பயனரின் பெயரில் உள்ள பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து பயன்படுத்தக்கூடிய அதிகபட்சத் தொகை).

"முழுப் பொறுப்பை ஒப்படைத்தல்" என்பது வரையறுக்கப்பட்ட அதிகபட்சச் செலவின வரம்புகளின்படி UPI Circle பரிவர்த்தனைகளைத் தொடங்கவும் முடிக்கவும் ஒரு முதன்மைப் பயனர், இரண்டாம்நிலைப் பயனரை அங்கீகரிக்கக்கூடிய முறை/பயன்முறை ஆகும்.

"பகுதியளவு பொறுப்பை ஒப்படைத்தல்" என்பது முதன்மைப் பயனர் தனது UPI பின்னை டைப் செய்வதன் மூலம் அந்தப் பரிவர்த்தனையை அங்கீகரிக்கும்பட்சத்தில், முதன்மைப் பயனர் UPI Circle அடிப்படையிலான பரிவர்த்தனையைத் தொடங்கவும் முடிக்கவும் இரண்டாம்நிலைப் பயனரை அங்கீகரிக்கக்கூடிய முறை/பயன்முறை ஆகும்.

"முதன்மைப் பயனர்" என்பது UPI அடிப்படையிலான சேவைகள்/வசதிகளைப் பெறுவதற்காக Google Pay ஆப்ஸைப் பயன்படுத்தும் ஒரு நபரைக் குறிக்கிறது மற்றும் Google Pay ஆப்ஸில் கிடைக்கும் UPIயின் UPI Circle அம்சத்தைப் பயன்படுத்தி பேமெண்ட்டுகளைச் செய்வதற்கு இரண்டாம்நிலைப் பயனரிடம் பொறுப்பை ஒப்படைப்பவர்.

"இரண்டாம்நிலைப் பயனர்" என்பது UPI உடன் இணைக்கப்பட்ட முதன்மைப் பயனரின் பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து UPI Circle பரிவர்த்தனைகளைச் செய்ய முதன்மைப் பயனரால் அங்கீகரிக்கப்பட்ட UPI பயனரைக் குறிக்கிறது.

நீங்கள் இவற்றைப் புரிந்துகொள்கிறீர்கள், ஒப்புக்கொள்கிறீர்கள், உறுதிப்படுத்துகிறீர்கள் மற்றும் மேற்கொள்கிறீர்கள்:

  1. முதன்மைப் பயனருக்கு:
    • சரியான நபர்தான் இரண்டாம்நிலைப் பயனராக அங்கீகரிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த, இரண்டாம்நிலைப் பயனரின் UPI ஐடியை உங்கள் UPI ஐடியுடன் இணைப்பதற்கு முன், அவரது UPI ஐடி மற்றும் மொபைல் எண்ணைச் சரிபார்த்து உறுதிசெய்வதற்கும் UPI Circle மூலம் UPI பரிவர்த்தனைகளைச் செய்ய அவருக்கு அங்கீகாரம் வழங்குவதற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.
    • இரண்டாம்நிலைப் பயனருக்கு வழங்கப்பட்ட UPI Circle அங்கீகாரத்தை நீங்கள் மாற்றலாம் அல்லது ரத்து செய்யலாம்.
    • UPI Circleலில் இரண்டாம்நிலைப் பயனரால் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் நீங்கள் அணுகலாம் பார்க்கலாம்.
    • இரண்டாம்நிலைப் பயனரின் அடையாளம் உங்களுக்குத் தெரியும் என்றும், UPI Circle பயன்படுத்தும்போது பொருந்தக்கூடிய இந்தியச் சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்றும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்கள்.
    • UPI Circleலில் உங்களால் சேர்க்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட இரண்டாம்நிலைப் பயனரால் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் செயல்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். UPI Circle அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் இரண்டாம்நிலைப் பயனரால் செய்யப்படும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைக்கும் NPCI அல்லது Google Pay பொறுப்பாகாது. UPI Circleலுக்குப் பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்குவதில் உங்களுக்கோ இரண்டாம்நிலைப் பயனருக்கோ ஏற்படும் இழப்புகள், சேதங்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு NPCI அல்லது Google Pay உங்களுக்காகவோ வேறொரு நபருக்காகவோ பொறுப்பேற்காது.
    • அவ்வப்போது குறிப்பிட்ட காலத்திற்கு Google Pay ஆப்ஸில் UPI Circleலைப் பயன்படுத்தி எந்தப் பரிவர்த்தனைகளையும் செய்யாவிட்டால், தொடர்புடைய இரண்டாம்நிலைப் பயனரின் UPI Circle பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான அங்கீகாரம் இடைநிறுத்தப்படலாம் அல்லது முடக்கப்படலாம்.
  2. இரண்டாம்நிலைப் பயனருக்கு:
    • UPI Circleலில் உள்ள முதன்மைப் பயனரின் UPI ஐடியுடன் உங்கள் UPI ஐடியை இணைப்பதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் பெயர், மொபைல் எண், UPI ஐடி மற்றும் பரிவர்த்தனை விவரங்களை முதன்மைப் பயனருடனும் UPI Circle பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதில் ஈடுபட்டுள்ள பிற மூன்றாம் தரப்புகளுடனும் பகிர்ந்துகொள்ள நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
    • எப்போது வேண்டுமானாலும் முதன்மைப் பயனருடனான உங்கள் UPI ஐடியின் இணைப்பைத் துண்டிக்கலாம்.
  3. பிற விதிமுறைகள்:
    • எந்த நேரத்திலும், முழுப் பொறுப்புடன் UPI Circle மூலம் பரிவர்த்தனைகளைச் செய்ய ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ₹15,000 வரை அனுமதிக்கப்படுகிறது.
    • எந்த நேரத்திலும், முழுப் பொறுப்புடன் UPI Circle மூலம் பரிவர்த்தனைகளைச் செய்ய ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹5000 வரை அனுமதிக்கப்படுகிறது.
    • முழுப் பொறுப்பின் கீழ், இரண்டாம்நிலைப் பயனரின் UPI ஐடியை முதன்மைப் பயனரின் UPI ஐடியுடன் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரையிலும் குறைந்தபட்சமாக 1 மாதம் வரையிலும் இணைக்க முடியும்.
    • இரண்டாம்நிலைப் பயனரின் UPI ஐடியை முதன்மைப் பயனரின் ஐடியுடன் அங்கீகரித்து இணைத்த பிறகு 30 நிமிடங்கள் காத்திருப்புக் காலம் இருக்கும். இந்த நேரத்தில் எந்தப் பரிவர்த்தனையும் தொடங்க அனுமதிக்கப்படாது.
    • UPI Circle விதிமுறைகளில் உள்ள எந்தவொரு முரண்பாட்டையும் பொருட்படுத்தாமல், Google Pay அதன் விருப்புரிமைப்படி எப்போது வேண்டுமானாலும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், UPI Circle சேவைகளுக்கான அணுகலை இடைநிறுத்தவோ முடக்கவோ, உங்கள் ஆப்ஸ் கடவுச்சொல்/UPI பின்னை மாற்றும்படி கேட்கவோ முழு அதிகாரம் உள்ளது.

16. தங்கக் கணக்கு

தங்கம் வாங்குவது அல்லது வைத்திருப்பது தொடர்பான வரம்புகள். உங்கள் GAP கணக்கில் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு அல்லது உங்கள் GAP கணக்கில் தங்கத்தைச் சேர்ப்பதற்காக GPayயில் பரிவர்த்தனை செய்யக்கூடிய தொகைக்கு Google வரம்புகளை விதிக்கலாம்.

GAP கணக்குகளின் இடைநிறுத்தமும் முடக்கமும். எங்கள் விருப்பப்படி இவற்றைச் செய்ய Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது: (a) உங்கள் தங்கக் கணக்கிற்கான அணுகலை இடைநிறுத்துதல்; அல்லது (b) தவறான KYC விவரங்களைச் சமர்ப்பித்தல், மோசடி செய்தல், இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளையோ அவ்வப்போது நாங்கள் உருவாக்கக்கூடிய பிற கொள்கைகளையோ மீறுதல் உள்ளிட்ட எந்தவொரு காரணத்திற்காகவும், உங்களுக்கு அல்லது மூன்றாம் தரப்புக்கு எந்த அறிவிப்பும் கடப்பாடும் இல்லாமல் உங்கள் GAP கணக்கை முடக்க MMTCயிடம் கேட்டல். இதுபோன்ற சூழலில், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் கிரெடிட் செய்யப்படுவது, உங்கள் தங்கத்தை MMTC திருப்பி வாங்குவது உட்பட அவசியமானதாகக் கருதும் எந்த நடவடிக்கையையும் Google எடுக்கலாம்.

ஹோஸ்ட் செய்யப்படும் தகவல்கள். பொதுவான தகவல் நோக்கங்களுக்காக தங்கம் தொடர்பாக MMTC வழங்கும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை Google அவ்வப்போது Google Payயில் காட்டும். MMTC வழங்கும் அத்தகைய தகவல்களின் துல்லியத்தன்மைக்கு Google எந்த வகையிலும் பொறுப்பாகாது.

பேமெண்ட் பரிவர்த்தனை. தங்கக் கணக்கில் துவங்கப்படும் அனைத்துப் பேமெண்ட் பரிவர்த்தனைகளும் ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளுக்கு உட்பட்டவையாகும். சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு, Google Payயில் உங்கள் Google கணக்குடன் GAPயைத் தொழில்நுட்பரீதியாக ஒருங்கிணைப்பதற்கு Google வழிவகை செய்யும். எனினும், அனைத்துத் தங்கப் பரிவர்த்தனைகளும் உங்களுக்கும் MMTCக்கும் இடையே மட்டுமே மேற்கொள்ளப்படும். ஏதேனும் தங்கப் பரிவர்த்தனையிலோ அதுதொடர்பாகவோ ஏற்படும் இழப்புகள் எதற்கும் Google எந்த வகையிலும் பொறுப்பாகாது.

தகவல் சேமிப்பு. Google Payயில் தங்கக் கணக்கைத் திறப்பதன் மூலம், Google Payயில் உங்களுக்குச் சேவைகளை வழங்கும் நோக்கத்திற்காகத் தங்கப் பரிவர்த்தனைத் தகவல்களையும் உங்கள் தங்கக் கணக்குடன் தொடர்புடைய பிற தகவல்களையும் தொடர்ச்சியாக அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் சேமிப்பதற்கும் Google Payக்கு வெளிப்படையாக அனுமதி வழங்குகிறீர்கள்.

17. தகவல்பரிமாற்றச் சேவைகள்

Google Pay மூலம் நீங்கள் மெசேஜ் அனுப்ப முடியும். Google Pay மூலம் பிற சேவை வழங்குநர்கள், பயனர்கள், வணிகர்கள் அல்லது பில்லர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு தகவல்பரிமாற்றத்திற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். நீங்களும் பிற சேவை வழங்குநர்கள், பயனர்கள், வணிகர்கள் அல்லது பில்லர்களும் ஒருவருக்கொருவர் தகவல்பரிமாற்றம் செய்துகொள்வதற்கான தளத்தை மட்டுமே Google வழங்குகிறது (தகவல்பரிமாற்றத் தளம்). மேலும், தரப்புகளுக்கு இடையிலான எந்தவொரு உரையாடலுக்கும் Google பொறுப்பாகாது. Google Pay மூலம் சட்டவிரோதமான, சட்டத்திற்குப் புறம்பான அல்லது அங்கீகாரமற்ற முறையில் தகவல்பரிமாற்றம் செய்யாமல் இருப்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். தகவல்பரிமாற்ற உள்ளடக்கம் இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளுடன் (குறிப்பாக Google Pay கொள்கைகளுடன்) இணங்க வேண்டும். தகவல்பரிமாற்றத் தளத்தின் மூலம் நேரடியாகப் பிற பயனர்களுக்கு ஆஃபர்கள், சலுகைகள் அல்லது விளம்பரங்கள் எதையும் வழங்க மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள். Google Pay கொள்கைகளுடனோ இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளுடனோ ஏதேனும் தகவல்பரிமாற்றம் இணங்காதபட்சத்தில், உங்கள் Google Pay சேவைகளின் பயன்பாட்டை முழுமையாகவோ பகுதியளவிலோ இடைநீக்க/முடக்க Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது. பிரிவு 21ல் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, தானியங்கு முறையில் உங்கள் Google Pay தகவல்பரிமாற்றங்களைச் சேகரிக்கவும் சேமிக்கவும் பயன்படுத்தவும் அணுகவும் Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது.

18. ஆஃபர்கள்

Google Pay ஆஃபர்கள். Google Pay ஆஃபர்களில் நீங்கள் பங்கேற்பது Google Pay ஆஃபர்கள் குறித்த பொதுவான விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். Google Payயில் இயக்கப்படும் பரிந்துரை ஆஃபர்கள் அல்லது போனஸ் வேட்டைகளைப் பொறுத்தவரை Google தெரிவிக்கும்படி, பரிந்துரைப்பவர், பரிந்துரைக்கப்படுபவர் ஆகிய இருவரும் ரிவார்டுகளுக்குத் தகுதிபெறுவார்கள். Google தெரிவிக்கும்படி, பரிந்துரைக்கப்படுபவர்கள் தகுதிபெறும் பரிவர்த்தனைகளை நிறைவுசெய்வதன் அடிப்படையில் பரிந்துரைப்பவர்கள் ரிவார்டுகளைப் பெறுவார்கள். ஏற்கெனவே உள்ள Google Pay பயனர்/பரிந்துரைப்பவர் உங்களைப் பரிந்துரைக்கும்பட்சத்தில், நீங்கள் Google Payயைப் பயன்படுத்தி பரிந்துரை ஆஃபர்/போனஸ் வேட்டைகளில் பங்கேற்பதற்குத் தேர்வுசெய்தால் பரிந்துரை ஆஃபர்/போனஸ் வேட்டைக்கான தகுதிபெறும் பரிவர்த்தனைகளின் நிறைவுநிலையும் செயல்நிலையும் பரிந்துரைப்பவருடன் பகிரப்படும் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவே, ரிவார்டைப் பெறுவது தொடர்பான செயல்நிலை பரிந்துரைப்பவருடன் பகிரப்படுகிறது. +91 என்ற தேசக் குறியீட்டுடன் தொடங்கும் இந்திய மொபைல் எண்களைக் கொண்டுள்ள பயனர்களுக்கு மட்டுமே பரிந்துரை ஆஃபர்கள் செல்லுபடியாகும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

வணிகர்/பில்லர் ஆஃபர்கள். Google Payயில் வணிகர்கள்/பில்லர்கள் உங்களுக்கு வழங்கும் ஆஃபர்கள் உங்களுக்கும் வணிகர்/பில்லருக்கும் இடையிலானவை ஆகும். அத்தகைய ஆஃபர்களின் உள்ளடக்கத்திற்கோ அவற்றை நிறைவேற்றுவதற்கோ Google பொறுப்பாகாது.

19. பணத்தைத் திரும்பப்பெறுதல், சார்ஜ்பேக்குகள் மற்றும் வழக்குகள்

பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் சார்ஜ்பேக்குகள். இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தவிர, Google Pay சேவைகள் மூலம் செயலாக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கான தொகை எதுவும் Google Payயால் அனுப்புநருக்குத் திருப்பியளிக்கப்படாது, அனுப்புநராலும் Google Pay சேவைகள் மூலம் அந்தத் தொகையைத் திரும்பப்பெற முடியாது. உங்கள் பேமெண்ட் முறை வழங்குநரின் ஒப்பந்தத்தின்படியோ பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைகளின்படியோ, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான அல்லது சார்ஜ்பேக்கிற்கான கூடுதல் உரிமைகள் உங்களுக்கு இருக்கக்கூடும். உங்கள் பேமெண்ட் முறை வழங்குநரிடமிருந்து பெறும் ஸ்டேட்மெண்ட்டுகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும். Google Pay சேவைகள் மூலம் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் அவற்றில் இருக்க வேண்டும்.

அனுப்புநரின் பேமெண்ட் முறை வழங்குநர் ஒரு பரிவர்த்தனைக்குச் சார்ஜ்பேக்கைக் கோரினால், அந்தப் பரிவர்த்தனைத் தொகையை ரிவர்ஸ் செய்வதற்கான முழு அதிகாரம் Googleளுக்கு உள்ளது. எந்தவொரு சார்ஜ்பேக் தொகையையும் பெறுநருக்கு அனுப்பப்பட வேண்டிய அடுத்தடுத்த பேமெண்ட்டுகளில் இருந்து பிடித்தம் செய்வதற்கும் Googleளுக்கு உரிமையுள்ளது.

வழக்குகள். பேமெண்ட் பரிவர்த்தனை அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையிலானது மட்டுமே என்பதையும் எந்தவொரு பயனர், பில்லர், வணிகர் அல்லது மூன்றாம் தரப்பு தொடர்பாகவும் அல்லது அத்தகைய பயனர், பில்லர், வணிகர் அல்லது மூன்றாம் தரப்பால் வழங்கப்படும் எந்தவொரு சேவை, பொருள் அல்லது டெலிவரி அளவிலான உறுதிப்பாட்டுக்கும் Google எந்த உத்திரவாதமும் அளிப்பதில்லை என்பதையும் புரிந்துகொள்கிறீர்கள். Google Pay சேவைகளைப் பயன்படுத்துவதால் எந்தவொரு பயனர், பில்லர், வணிகர் அல்லது மூன்றாம் தரப்பையும் Google பரிந்துரைப்பதாக எந்த விதத்திலும் பொருள்படாது. Google Pay சேவைகள் மூலம் பிறருக்குப் பேமெண்ட்டுகள் செய்வதற்கு முன்பு நீங்கள் போதுமான அளவிற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். எந்தவொரு வழக்கும் அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையிலானது மட்டுமே. Google மற்றும்/அல்லது பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர்களை அத்தகைய வழக்குகளில் ஒரு தரப்பாகக் கருத முடியாது. எனினும், UPI பேமெண்ட் பரிவர்த்தனைகள் தொடர்பான குறைகள்/புகார்களுக்குத் தீர்வுகாண பயனர்களுக்கு உதவுவதற்கு நாங்களே பொறுப்பாவோம். UPI பேமெண்ட் பரிவர்த்தனை தொடர்பான அனைத்துக் குறைகள்/புகார்களையும் பொறுத்தவரை, நாங்களே பயனர்களுக்கான முதல் தொடர்புப் பிரதிநிதியாவோம். புகார்/குறை தீர்க்கப்படவில்லை என்றால், அடுத்தகட்டமாக அது PSPயின் மேலிடப் பார்வைக்கும், அதற்கடுத்ததாக வாடிக்கையாளரின் பேங்க்கிற்கும், இறுதியாக NPCIக்கும் அனுப்பப்படும். இவற்றிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், புகார்/குறையைப் பொறுத்து பேங்க்கிங் குறைதீர்ப்பாளர் மற்றும்/அல்லது டிஜிட்டல் புகார்களுக்கான குறைதீர்ப்பாளரை நீங்கள் அணுகலாம்.

அத்துடன், நிதிச் செயலாக்கம் மற்றும்/அல்லது செட்டில்மெண்ட் நோக்கத்திற்காக Google Pay சேவைகளைப் பயன்படுத்தாத வணிகருக்கோ மூன்றாம் தரப்பிற்கோ பேமெண்ட்டுகள் செய்ய Google Pay மூலம் உருவாக்கப்பட்ட BHIM UPI அல்லது கிரெடிட் கார்டு அனுமதிச் சான்றுகளை நீங்கள் பயன்படுத்தத் தேர்வுசெய்தால், பேமெண்ட் சிஸ்டம் வழங்குநருக்குப் பேமெண்ட் வழிமுறைகளை வழங்குவது மட்டுமே Googleளின் பங்காக இருக்கும். பரிவர்த்தனையின் செயலாக்கம் அல்லது செட்டில்மெண்ட்டிற்கும் எந்தவொரு வழங்கல்/சேவை நிறைவேற்றத்திற்கும் Google பொறுப்பேற்காது. ஆனால், குறிப்பிட்ட சூழல்களில் பெறுநரின் சார்பாக நிதியைப் பெறும் நோக்கத்திற்காக மட்டும் பெறுநருக்கான கலெக்‌ஷன் ஏஜெண்ட்டாக Google செயல்படக்கூடும். நீங்கள் சரியான தகவல்களை வழங்கியுள்ளதையோ சரியான பெறுநரைத் தேர்ந்தெடுத்துள்ளதையோ உறுதிசெய்துகொள்வது உங்கள் பொறுப்பாகும்.

அனுப்புநர்களுக்கும் பெறுநர்களுக்கும் இடையிலான வழக்குகளிலோ அனுப்புநர்/பெறுநருக்கும் பேமெண்ட் பங்கேற்பாளர்களுக்கும் இடையிலான வழக்குகளிலோ Google மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. எனினும், பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது பேமெண்ட் பங்கேற்பாளரின் விதிகளின்படி தேவைப்பட்டால், வழக்கு தொடர்பாகப் பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கோ பயனரின் புகாரைத் தொடர்புடைய பேமெண்ட் பங்கேற்பாளருக்கு அனுப்புவதற்கோ Google உதவும். Google Pay சேவைகள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் Googleளைத் தொடர்புகொள்ளுங்கள். சாத்தியமான இடங்களில் அவற்றைத் தீர்ப்பதற்கு உங்களுடன் இணைந்து பணிபுரிவோம்.

உரிமையை விட்டுக்கொடுத்தல் மற்றும் விடுவித்தல். ஒரு வழக்கின் காரணமாக ஏற்படக்கூடிய அல்லது ஏதேனும் வகையில் அதனுடன் தொடர்புடைய அனைத்து உரிமைகோரல்கள், கோரிக்கைகள் மற்றும் பாதிப்புகளில் இருந்தும் (அசலானவை மற்றும் விளைவாக ஏற்படுபவை) Google, அதன் குழு நிறுவனங்கள், அவற்றின் ஏஜெண்ட்டுகள், ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை விடுவிப்பதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். Google Pay சேவை தொடர்பாக எந்தவொரு பெறுநர், அனுப்புநர், விளம்பரதாரர் அல்லது வேறு மூன்றாம் தரப்புடனும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிவர்த்தனை, ஒப்பந்தம் அல்லது பங்கேற்பில் இருந்தும் எழுகின்ற அல்லது அவை தொடர்பான வழக்காடல் அல்லது வேறு சிக்கல் எதிலும் Googleளை ஈடுபடுத்த மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் அப்படிச் செய்ய முயன்றால், (i) Googleளுக்கும் அதன் குழு நிறுவனங்களுக்கும் ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் வழக்கறிஞரின் கட்டணங்களையும் நீங்களே செலுத்த வேண்டும், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு நஷ்ட ஈடும் வழங்க வேண்டும், (ii) அத்தகைய வழக்காடுதல்/வழக்கிற்கு உரிய அதிகார எல்லை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரம்பிற்குட்பட்டு இருக்கும். எனினும், தொடர்புடைய பேமெண்ட் பங்கேற்பாளர்களின் விதிகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின்படி, பேமெண்ட் பரிவர்த்தனை தொடர்பாக உங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள், உரிமைகோரல்கள் அல்லது பிரதிவாதங்கள் எதையும் விட்டுக்கொடுப்பதாக இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளில் உள்ள எதுவும் குறிப்பிடுவதில்லை.

20. மோசடி அல்லது அங்கீகாரமற்ற பயன்பாடு

Google Payயில் உங்கள் Google கணக்கு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அல்லது வழங்கப்படும் வழிமுறைகள் அனைத்தும் நீங்கள் வழங்குபவையாகவே கருதப்படும். Google Payயில் உங்கள் Google கணக்கு மூலம் அங்கீகாரமற்ற முறையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களோ நிதி தொடர்பான தகவல்களோ அணுகப்பட்டால்/பயன்படுத்தப்பட்டால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள். Google Payயில் உங்கள் Google கணக்கு அங்கீகாரமற்ற முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, Google பரிந்துரைக்கின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். Google Payயில் உங்கள் Google கணக்கு அங்கீகாரமற்ற முறையில் அணுகப்பட்டுள்ளதாகவோ பயன்படுத்தப்பட்டுள்ளதாகவோ நீங்கள் கருதினால், உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

21. ஆபத்தைத் தடுப்பதற்கான கண்காணிப்பு: வழக்கத்திற்கு மாறான அல்லது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள்

ஏதேனும் அதிக ஆபத்துள்ள செயல்பாடுகளோ மோசடிப் பரிவர்த்தனைகளோ மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை அறிய உங்கள் பரிவர்த்தனைகளை நாங்கள் கண்காணிக்கக்கூடும். இந்த முயற்சிகளிலும் Google Pay சேவைகளின் பிற செயல்பாடுகளிலும் உதவ மூன்றாம் தரப்பு வழங்குநர்களையோ பிற சேவை வழங்குநர்களையோ கூட நாங்கள் ஈடுபடுத்தக்கூடும். Google Payயில் உங்கள் Google கணக்கு மூலம் சந்தேகத்திற்குரிய அல்லது வழக்கத்திற்கு மாறான செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாக நாங்கள் கருதுவதற்குக் காரணம் இருந்தால், Google Pay சேவைகளுக்கான உங்கள் அணுகலை நாங்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இடைநீக்கக்கூடும்.

ஆபத்து மேலாண்மை, மோசடியான, சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் தொடர்பான சந்தேகம், தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை, களவாடப்பட்ட/தடைசெய்யப்பட்ட கார்டுகள், BHIM UPI கணக்குகள், Google கணக்குகள் ஆகியவற்றை Google Payயில் பயன்படுத்துதல், சார்ஜ்பேக்குகள்/புகார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவோ இன்ன பிற காரணங்களுக்காகவோ பேமெண்ட் பங்கேற்பாளரின் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு காரணங்களுக்காகவோ பரிவர்த்தனை மற்றும்/அல்லது பேமெண்ட்டுகளின் செட்டில்மெண்ட்டுகளை நாங்கள் மற்றும்/அல்லது பேமெண்ட் பங்கேற்பாளர்கள் நிராகரிக்கக்கூடும். ஒரு பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ நிறைவுசெய்யப்படவில்லை என்றாலோ, நாங்கள் அதற்குரிய பணத்தை அனுப்புநரின் நிதியளிக்கும் அக்கவுண்ட்டில் திருப்பிச் செலுத்துவோம் அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின்படியோ பேமெண்ட் பங்கேற்பாளரின் விதிகளின்படியோ அந்தப் பணத்தைக் கையாள்வோம்.

அதுமட்டுமின்றி, ஒரு சட்டப்பூர்வ/அரசாங்க அமைப்பிற்குத் தேவைப்படும்போதோ தொடர்புடைய பேமெண்ட் பங்கேற்பாளர் கேட்டுக்கொண்டாலோ Google Payயில் உள்ள Google கணக்கின் மீது இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கக்கூடும்.

22. தனியுரிமை மற்றும் தகவல்பரிமாற்றங்கள்

தனியுரிமை. ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளில் உள்ள பிற சட்டக் கூறுகளுடன் கூடுதலாக, உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் Google Pay மூலம் செய்யப்படும் அனைத்துத் தகவல்பரிமாற்றங்களையும் பொருந்தக்கூடிய சட்டங்களின்படியும் எங்கள் தனியுரிமைக் கொள்கையின்படியும் நாங்கள் சேகரிக்கலாம் சேமிக்கலாம் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள். Google Payயைப் பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிக் கையாள்கிறோம் என்பதையும் உங்கள் தனியுரிமையை நாங்கள் எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதையும் எங்கள் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது. எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மட்டுமின்றி, UPI பரிவர்த்தனைத் தரவு மற்றும் கடன் விண்ணப்பத் தரவின் பயன்பாடு கீழுள்ள பத்தியிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

UPI பரிவர்த்தனைத் தரவு:

செயல்பாடுகள், செட்டில்மெண்ட் பேமெண்ட் செயலாக்கம், Google Pay சேவைகளை விளம்பரப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காகத் தேவைப்படுவதால் வணிகர்கள், பேங்க்குகள், மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் UPI பரிவர்த்தனைத் தரவு உள்ளிட்ட உங்கள் பேமெண்ட்டுகள் தொடர்பான தகவல்களை Google பகிரக்கூடும்.

எந்தவொரு வருமானம் ஈட்டுதல் நோக்கத்திற்காகவும் (எ.கா. விளம்பரங்களுக்காக) உங்கள் UPI பரிவர்த்தனைத் தரவு Google நிறுவனத்தை (Google India Digital Services Private Limited என்றும் அழைக்கப்படுகிறது) தவிர வேறெந்த நிறுவனத்தாலும் பயன்படுத்தப்படாது.

நீங்கள் பெறுநராக இருந்தால், உங்களுக்குப் பேமெண்ட்டுகளை அனுப்பும் நோக்கத்திற்காக Google Payயில் உள்ள உங்கள் பேங்க் அக்கவுண்ட் எண் உள்ளிட்ட தகவல்களை Google சேமிக்கக்கூடும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள்.

உங்கள் Google Pay வழிசெலுத்தல், பதிவு மற்றும் தகவல்பரிமாற்றத் தகவல்கள்/தரவைத் தானியங்கு முறையில் Google அணுகக்கூடும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள். எங்கள் Google Pay சேவைகள் பயன்படுத்தப்படுகின்ற வணிகர்கள், சந்தைகள், தொழில்நுட்பம், ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள், பிரவுசர்கள், சாதனங்கள், இருப்பிடங்கள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ய இந்தத் தகவல்கள்/தரவு எங்களுக்கு உதவும். உதாரணமாக, நாங்கள் உங்கள் தேவைகளை இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டு உங்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்குவதற்கோ குறிப்பிட்ட ஆப்ரேட்டிங் சிஸ்டங்களுக்கும் மொபைல் ஆப்ஸ் பதிப்புகளுக்கும் புதுப்பிப்புகளை உருவாக்குவதற்கோ அத்தகைய தகவல்களும் அவற்றின் பகுப்பாய்வும் எங்களுக்கு உதவும். நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கக்கூடும் என்று நாங்கள் நம்பும் வணிகர்கள்/பில்லர்கள் வழங்கும்படியான ஆஃபர்கள் உள்ளிட்ட பிற தயாரிப்புகள், திட்டங்கள் அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்கோ ஏதேனும் மென்பொருள் இணக்கத்தன்மைச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதுதொடர்பாக உங்களை எச்சரிப்பதற்கோ கூட சேகரிக்கப்பட்ட தகவல்கள் எங்களுக்கு உதவும்.

Google நிறுவனமோ அதன் குழு நிறுவனங்களோ வழங்கும் மேம்பட்ட சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்காக Google தானியங்கு முறையில் உங்கள் மொபைல் சாதனம்/மொபைல் எண்ணில் உள்ள மெசேஜ்களை அணுகி அவற்றிலுள்ள தகவல்களை மீட்டெடுக்கலாம்/பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள். உதாரணம்: OTP என்பது இருபடி அங்கீகாரத்தை மேற்கொள்வதற்காக உங்கள் வழங்குநர் பேங்க் வழங்கும் 'ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்' ஆகும். உங்கள் மெசேஜ்களை அணுக நீங்கள் எங்களை அனுமதித்தால், நாங்கள் உங்கள் மொபைல் சாதனம்/எண்ணில் பெறப்படுகின்ற மெசேஜிலுள்ள OTPயை மீட்டெடுத்து, இருபடி அங்கீகாரத்திற்காக அதைத் தானாக நிரப்பிச் சமர்ப்பிக்கலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

எந்தவொரு மூன்றாம் தரப்பு/பெறுநரிடமிருந்தும் தேவைப்படுகின்ற அனைத்து அத்தியாவசியமான முன்கூட்டிய ஒப்புதல்களையும் உரிமை விடுவிப்புகளையும் நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்பதற்கும், இந்தப் பத்தியில் விவரிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ள Google நிறுவனத்தையும் அதன் குழு நிறுவனங்களையும் பேமெண்ட் பங்கேற்பாளர்களையும் அனுமதிப்பதற்கான அறிவிப்பை அந்த மூன்றாம் தரப்பு/பெறுநருக்கு வழங்கிவிட்டீர்கள் என்பதற்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறீர்கள். அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற தகவல்களை Googleளுக்கு வழங்குவதற்கு முன்பே நீங்கள் அத்தகைய அறிவிப்புகளை வழங்கி அத்தகைய தேவையான ஒப்புதல்களையும் உரிமை விடுவிப்புகளையும் பெறுவீர்கள் என உத்திரவாதம் அளிக்கிறீர்கள்.

Google Payயில் இருந்தோ உங்கள் Google கணக்கிலிருந்தோ ஏதேனும் தகவல்கள்/தரவை நீங்கள் நீக்குவதற்கோ படிக்க முடியாதபடி செய்வதற்கோ தேர்வுசெய்தால் அல்லது நீங்களோ Googleளோ உங்கள் Google கணக்கு/Google Pay சேவைகளின் பயன்பாட்டை முடக்குவதற்குத் தேர்வுசெய்தால், Google தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள சட்டக் காரணங்களுக்காக அத்தகைய தகவல்கள்/தரவை நாங்கள் தொடர்ந்து தக்கவைத்திருக்கலாம், பயன்படுத்தலாம் மற்றும்/அல்லது வெளியிடலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

Google Payயைப் பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எப்படிக் கையாள்கிறோம் என்பதையும் உங்கள் தனியுரிமையை நாங்கள் எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதையும் Google தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது.

Googleளுடனான அல்லது Google வழங்கும் தகவல்பரிமாற்றங்கள். Googleளுடனான அல்லது Google வழங்கும் தகவல்பரிமாற்றங்களுக்காக உங்கள் தகவல்களின் சேகரிப்பு, சேமிப்பு, பயன்பாடு ஆகியவற்றை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள். பின்வரும் நோக்கங்களுக்காக நாங்கள் சுயமாகவோ மூன்றாம் தரப்புகள் மூலமாகவோ உங்களுக்கு மின்னஞ்சல்கள், மெசேஜ்கள் அனுப்பலாம் அல்லது பிற வழிகளில் உங்களைத் தொடர்புகொள்ளலாம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறீர்கள்:

(i) Google Pay சேவைகளையும் பரிவர்த்தனை/கணக்கு தொடர்பான தகவல்களையும் உங்களுக்கு வழங்குதல்;

(ii) பேமெண்ட் தொடர்பான நினைவூட்டல்கள்/அறிவிப்புகளை உங்களுக்கு அனுப்புதல்;

(iii) Google Pay சேவைகளையோ பிற Google சேவைகளையோ விளம்பரப்படுத்துதல்;

(iv) குழு நிறுவனங்களின் சேவைகளையோ எங்கள் மூன்றாம் தரப்பு வழங்குநர்களின் சேவைகளையோ (இந்நிறுவனங்கள் வழங்கக்கூடிய ஏதேனும் ஆஃபர்கள்/திட்டங்கள்/பரிசுகள் உட்பட) விளம்பரப்படுத்துதல். இந்த விளம்பரங்களில் உங்கள் UPI பரிவர்த்தனைத் தரவு பயன்படுத்தப்படாது;

(v) புதிய தயாரிப்புகளையும் செயல்பாடுகளையும் விளம்பரப்படுத்துதல்;

(vi) புகார்கள் உட்பட ஏதேனும் தயாரிப்பு அல்லது Google Pay சேவை தொடர்பான சிக்கல்களை விசாரித்தல்/தீர்த்தல்; அல்லது

(vii) உங்கள் மதிப்புமிக்க கருத்தைப் பெறுதல்.

உங்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு, இவற்றைப் புரிந்துகொள்வதற்காக நாங்கள் உங்களுக்குக் கருத்துக்கணிப்புகளையும் அனுப்பக்கூடும்: (i) எங்கள் சேவைகள் பற்றிய உங்கள் அனுபவம், மற்றும்/அல்லது (ii) உங்கள் தேவைகள்.

சேவை அல்லது எங்கள் தயாரிப்புகளை எப்படி மேம்படுத்துவது என்பது உள்ளிட்ட Google Pay சேவைகள் குறித்த கருத்துகளையோ யோசனைகளையோ நீங்கள் சமர்ப்பிப்பதற்குத் தேர்வுசெய்யலாம் அல்லது அவற்றைச் சமர்ப்பிக்குமாறு நாங்கள் உங்களை அழைக்கலாம். எந்தவொரு யோசனையையும் சமர்ப்பிப்பதன் மூலம், இலவசமாகவும் கோரிக்கை பெறாமலும் கட்டுப்பாடின்றியும் உங்கள் யோசனையை வழங்குகிறீர்கள் என்பதையும், ஏதேனும் நம்பிக்கைக்குரிய கட்டாயத்திற்கோ வேறு கட்டாயத்திற்கோ அது எங்களை உட்படுத்தாது என்பதையும், உங்களுக்குக் கூடுதல் ஈட்டுத் தொகை எதுவும் வழங்காமல் நாங்கள் அந்த யோசனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும்/அல்லது ரகசியமற்ற முறையிலோ வேறு ஏதேனும் முறையிலோ அந்த யோசனையை யாரிடமும் தெரிவிக்கலாம் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

கடன் விண்ணப்பத் தரவு:

நீங்கள் Google Payயில் கடன்கள் பெற விண்ணப்பிக்கும்போது, பின்வரும் தனிப்பட்ட தகவல்களை Google Pay சேகரிக்கக்கூடும்:

  • தனிப்பட்ட விவரங்கள்: முழுப் பெயர், பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், PAN, திருமண நிலை, தந்தையின் பெயர், தாயின் பெயர், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, பேங்க் அக்கவுண்ட் எண், பேங்க் IFSC எண்.

  • வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் தொடர்பான விவரங்கள்: வேலைவாய்ப்பு/தொழில் வகை, பணி வழங்கிய நபர்/நிறுவனத்தின் பெயர், தொழில்துறை, பதிவு வகை, தனிநபர் வருமானம், குடும்ப வருமானம், அலுவலக முகவரி.

கடன் வழங்கும் மூன்றாம் தரப்புகள் மேற்கொள்ளும் தொடக்கச் செயல்முறை/KYC நோக்கங்களுக்குத் தேவைப்படுவதால், உங்கள் மொபைலின் கேமரா, மைக்ரோஃபோன், இருப்பிடம் போன்ற குறிப்பிட்ட அம்சங்கள் அல்லது வேறு ஏதேனும் வசதிக்கான ஒருமுறை அணுகலையும் Google Pay பெறக்கூடும். Google Pay எந்தவொரு பயோமெட்ரிக் டேட்டாவையும் சேகரிப்பதில்லை, சேமிப்பதுமில்லை.

தனிநபர் கடன் விண்ணப்பத்தின் ஒரு பகுதியாகச் சேகரிக்கப்படும் உங்கள் தனிப்பட்ட தரவைப் பின்வரும் நோக்கங்களுக்காக Google Pay பயன்படுத்தும்: a) உங்கள் தகவல்களைக் கிரெடிட் தகவல்களுக்கு அனுப்புவதன் மூலம், கடன் வசதிச் சேவைக்கான உங்கள் விண்ணப்பச் செயல்முறையை எளிதாக்க உதவுவதற்கு, b) கடன் வசதிச் சேவையின் பகுப்பாய்வு நோக்கங்களுக்காக, c) புகார்கள்/உரிமைகோரல்கள்/வழக்குகளை எதையும் கையாள்வதற்கு அல்லது விசாரிப்பதற்கு, d) தயாரிப்புகளையும் சேவைகளையும் அவ்வப்போது கண்காணித்து மதிப்பாய்வு செய்வதற்கு, e) நிதி/ஒழுங்குமுறை/நிர்வாகம் சார்ந்த அறிக்கையிடலில் ஈடுபட்டு, பல்வேறு ஆபத்து மேலாண்மை மாடல்களை உருவாக்கிப் பராமரிப்பதற்கு மற்றும் f) தணிக்கைகளை மேற்கொள்வதற்கும் பதிவுகளில் வைத்திருக்கும் நோக்கங்களுக்காகவும்.

கடன் விண்ணப்பத் தரவு எப்படிப் பகிரப்படுகிறது?

உங்கள் கடன் விண்ணப்பத்தைச் செயலாக்குவதற்காக, உங்களிடம் வெளிப்படையான ஒப்புதலைப் பெற்ற பிறகே கடன் வழங்கும் மூன்றாம் தரப்புகளுடன் உங்கள் தனிப்பட்ட தரவை Google Pay பகிரும்.இவை பகிரப்பட்ட பிறகு, நீங்கள் கடன் பெற விண்ணப்பித்த கடன் வழங்குநரிடமுள்ள இந்தத் தரவு அவரது தனியுரிமைக் கொள்கையின்படியும் செயலாக்கப்படும். கடன் வழங்கும் கூட்டாளர் எவருடனும் உங்கள் தனிப்பட்ட தரவை Google Pay தொடர்ச்சியாகப் பகிர்வதில்லை. பகிரப்படுகின்ற அனைத்துத் தரவும் இயல்பாக ஒருமுறை மட்டுமே பகிரப்படும்.

தரவு மற்றும் ஒப்புதலை நீக்குதல்/அழித்தல்/படிக்க முடியாதபடி செய்தல்/தக்கவைத்தல்

எப்போது வேண்டுமானாலும் உங்கள் Google கணக்கு அமைப்புக்குச் சென்று உங்கள் UPI பரிவர்த்தனைத் தரவையும் கடன் விண்ணப்பத் தரவையும் நீக்கிக்கொள்ளலாம். இதன் மூலம், அந்தத் தரவைப் பயன்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். எனினும், Google Payயின் கூட்டாளர்கள் அத்தகைய தரவை நீக்குவதற்கு Google Pay எந்த வகையிலும் பொறுப்பேற்காது. மேலும், உள்ளூர் சட்டங்களாலும் ஒழுங்குமுறைகளாலும் அனுமதிக்கப்படும் வகையிலோ சட்டப்பூர்வக் காரணங்களுக்காகவோ மட்டுமே தரவு நீக்கப்படும். தரவை நீக்குதல், படிக்க முடியாதபடி செய்தல் மற்றும் தக்கவைத்தல் தொடர்பான Google கொள்கைகள் குறித்து Google தனியுரிமைக் கொள்கையில் மேலும் படியுங்கள்.

பாதுகாப்பு

பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க (கொள்கையின்படி) தனிப்பட்ட தரவை Google பாதுகாக்கிறது.

23. அறிவுசார் சொத்துரிமைகளின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு

பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள், காப்புரிமைகள், தொழில் ரகசியம் மற்றும்/அல்லது பிற அறிவுசார் உடைமைச் சட்டங்களால் Google Pay சேவைகள் பாதுகாக்கப்படுகின்றன. Google Pay சேவைகளில் உள்ள தலைப்பு, பதிப்புரிமை மற்றும் பிற உலகளாவிய அறிவுசார் சொத்துரிமைகள் Google LLC நிறுவனத்துக்குச் சொந்தமானவை ஆகும். Google Pay சேவைகளில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளுக்கான உரிமைகள் எதையும் இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகள் உங்களுக்கு வழங்குவதில்லை. முன்கூட்டிய எழுத்துப்பூர்வ ஒப்புதலின்றி Google அல்லது அதன் குழு நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமைகளைப் பயனர்கள் பயன்படுத்துவதற்கோ அத்துமீறுவதற்கோ எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்துவதற்கோ மீறுவதற்கோ இந்த விதிமுறைகள் எதுவும் அனுமதிப்பதில்லை. இந்த விதிமுறைகளை நீங்கள் ஏற்கும்பட்சத்தில், Google Pay சேவையைப் பயன்படுத்துவதற்கான வரம்பிடப்பட்ட உரிமம் இதன் மூலம் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் Google Payயைப் பயன்படுத்தி உங்கள் இறுதிப் பயனர்களிடமிருந்து BHIM UPI கட்டமைப்பு மூலம் பேமெண்ட்டுகளைப் பெற விரும்பும் வணிகராக இருந்தால், Google Pay வர்த்தக முத்திரைகளையும் Google Pay லோகோக்களையும் பயன்படுத்துவதற்கான உங்கள் உரிமை இந்த Google Pay பிராண்டு வழிகாட்டுதல்களின்படி வரம்பிடப்படும்.

Google Pay ஆப்ஸுக்கான கருத்தோ அந்த ஆப்ஸ் மூலம் வழங்கப்படும் கருத்தோ இருக்கக்கூடிய உள்ளடக்கத்தை நீங்கள் பதிவேற்றினால், சமர்ப்பித்தால், சேமித்தால், அனுப்பினால் அல்லது பெற்றால், அந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்துதல், ஹோஸ்ட் செய்தல், சேமித்தல், மறுஉருவாக்கம் செய்தல், மாற்றியமைத்தல், வருவிக்கப்பெற்ற படைப்புகளை உருவாக்குதல் (உங்கள் உள்ளடக்கம் Google Pay சேவைகளில் சிறந்த முறையில் செயல்படுவதற்காக அவற்றில் நாங்கள் செய்யும் மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் அல்லது பிற மாற்றங்களின் விளைவாக உருவாகும் படைப்புகள் போன்றவை), தகவல் பரிமாற்றம் செய்தல், வெளியிடுதல், பொதுவில் செயல்படுத்துதல், பொதுவில் காட்சிப்படுத்துதல், விநியோகித்தல் ஆகியவற்றைச் செய்வதற்கான உலகளாவிய, காலவரையற்ற உரிமத்தை Googleளுக்கு வழங்குகிறீர்கள். இந்த உரிமத்தை Google பயன்படுத்தவில்லை என்றாலும் அது உங்களுக்குத் திருப்பியளிக்கப்படாது. இந்த உரிமத்தில் நீங்கள் வழங்கும் உரிமைகள் Google Pay சேவைகளைச் செயல்படுத்துதல், விளம்பரப்படுத்துதல், மேம்படுத்துதல், புதிய சேவைகளை உருவாக்குதல் ஆகிய குறிப்பிட்ட நோக்கங்களுக்கானவை ஆகும். நீங்கள் Google Pay சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினாலும் இந்த உரிமம் தொடரும்.

24. வரிகளுக்கான பொறுப்பு

Google Pay சேவைகளைப் பயன்படுத்துவதால் ஏதேனும் பொருந்தக்கூடிய வரிகள் விதிக்கப்பட்டால், அவற்றைத் தெரிவிப்பதும் செலுத்துவதும் உங்கள் பொறுப்பாகும். உங்கள் Google Pay சேவைகளின் பயன்பாடு தொடர்பாகப் பொருந்தக்கூடிய அனைத்து வரிச் சட்டங்களுக்கும் நீங்கள் இணங்குவதாக இதன் மூலம் ஒப்புக்கொள்கிறீர்கள். Google Pay சேவைகள் மூலம் செய்யப்படும் பேமெண்ட்டுகள் அல்லது Google Pay சேவைகள் மூலம் பெறப்படும் நிதி/வருமானம் தொடர்பாக விதிக்கப்படும் வரிகளை அறிக்கையிடுவதும் செலுத்துவதும் இன்ன பிறவும் இதிலடங்கும்.

25. நஷ்ட ஈடு செலுத்துதல்

Google, குழு நிறுவனங்கள், பேமெண்ட் பங்கேற்பாளர்கள், அதன் மற்றும் அவற்றின் இயக்குநர்கள், அதிகாரிகள், உரிமையாளர்கள், ஏஜெண்ட்டுகள், கூட்டுப் பணியாற்றும் பிராண்டுகள் அல்லது பிற கூட்டாளர்கள், பணியாளர்கள், தகவல் வழங்குநர்கள், உரிமம் அளிப்பவர்கள், உரிமம் பெறுபவர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற மூன்றாம் தரப்புகள் ஆகியோருக்கு (ஒட்டுமொத்தமாக "நஷ்ட ஈடு பெறும் தரப்புகள்" எனப்படுகிறது) பின்வருபவற்றில் இருந்தோ அவை தொடர்பாகவோ ஏற்படுகின்ற அல்லது அவற்றிலிருந்து ஏற்படக்கூடிய நியாயமான வழக்கறிஞரின் கட்டணம் (நஷ்ட ஈடு பெறும் தரப்புகளுக்கான வழக்கறிஞரின் கட்டணமும் இன்ன பிறவும்) உட்பட அனைத்து உரிமைகோரல்கள், கோரிக்கைகள், நடவடிக்கைக்கான மூலங்கள், கடன்கள் அல்லது கடப்பாடுகளுக்கும் நீங்கள் நஷ்ட ஈடு செலுத்தவும், பிரதிவாதம் செய்யவும், அவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டவும் ஒப்புக்கொள்கிறீர்கள்:

(a) சேவைகளை நீங்கள் பயன்படுத்துதல்;

(b) நீங்கள் இந்த Google Pay விதிமுறைகளில் உள்ள ஏதேனும் விதிமுறையையோ ஏதேனும் Google Pay கொள்கைகளையோ மீறுதல் அல்லது அவற்றுக்கு இணங்காமல் இருத்தல்;

(c) உங்கள் செயல்கள்/செயலின்மைகளால் ஏற்படும் ஏதேனும் வழக்கு/வழக்காடுதல்; அல்லது

(d) மூன்றாம் தரப்பின் ஏதேனும் பொருந்தக்கூடிய சட்டத்தையோ உரிமைகளையோ நீங்கள் அலட்சியப்படுத்துதல், மீறுதல் அல்லது மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருத்தல்.

26. பொறுப்புதுறப்பு

சேவைகள் "உள்ளது உள்ளபடியே" வழங்கப்படுகின்றன (சேவைகளில் கிடைக்கச் செய்யப்படுகின்ற, அவை தொடர்பாக வழங்கப்படுகின்ற அல்லது அவற்றின் மூலம் அணுக முடிகின்ற அனைத்து உள்ளடக்கம், மென்பொருள், செயல்பாடுகள், ஆவணங்கள், தகவல்கள் உட்பட). சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழுமையான வரம்பிற்கு உட்பட்டு, சேவைகளுக்கோ சேவைகளில் பயன்படுத்தப்படும் அல்லது அவற்றின் மூலம் அணுகப்படுகின்ற மென்பொருளால் அணுகல் வழங்கப்படுகின்ற உள்ளடக்கம், ஆவணங்கள், தகவல்கள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கோ பாதுகாக்க வேண்டிய தகவல்களைச் சேவைகள் மூலம் பரப்புவது தொடர்பான ஏதேனும் பாதுகாப்பு மீறலுக்கோ Google, குழு நிறுவனங்கள், அவற்றின் ஏஜெண்ட்டுகள், சாதன உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட கூட்டுப் பணியாற்றும் பிராண்டுகள் அல்லது பிற கூட்டாளர்கள் (ஒட்டுமொத்தமாக "Google தரப்புகள்" எனப்படுகிறது) எந்த வகையான வாக்குமூலம்/உத்திரவாதமும் அளிப்பதில்லை. ஒவ்வொரு Google தரப்பும் மீறலின்மையையும், விற்பனைத்தரத்தையும், குறிப்பிட்ட நோக்கத்திற்கேற்ற தன்மையையும், சேவைகள் தொடர்பான எந்த வகையான உத்திரவாதத்தையும் வரம்பின்றி உரிமைவிலக்குகிறது. சேவைகளில் உள்ள செயல்பாடுகளில் இடையூறுகளோ பிழைகளோ இருக்காது என Google உத்திரவாதம் அளிப்பதில்லை. சேவை இடையூறுகள் எதற்கும் Google பொறுப்பாகாது. பேமெண்ட் பரிவர்த்தனைகள், P2P பேமெண்ட்டுகள் அல்லது சேவைகளைப் பெறுவதை, செயலாக்குவதை, ஏற்றுக்கொள்வதை, நிறைவுசெய்வதை அல்லது செட்டில் செய்வதைப் பாதிக்கக்கூடிய சிஸ்டம் செயலிழப்புகள் அல்லது பிற இடையூறுகளும் இன்ன பிறவும் இதிலடங்கும்.

எந்தவொரு பேமெண்ட் முறையின் துல்லியத்தன்மைக்கும் Google தரப்புகள் பொறுப்பாகாது. அவை தற்போதைய மற்றும் சமீபத்திய தகவல்களாக உள்ளனவா என்பதும் இன்ன பிறவும் இதிலடங்கும். முந்தைய வாக்கியத்தின் பொதுத்தன்மையைக் கட்டுப்படுத்தாமல், வழங்குநர் தீர்மானிக்கும் குறிப்பிட்ட நேரத்திலேயே அத்தகைய தகவல்கள் வழங்குநரால் அறிக்கையிடப்படுகின்றன என்பதையும் சேவைகள் மூலம் அந்தத் தகவல்கள் உங்களுக்குக் காட்டப்படும் நேரத்திலோ நீங்கள் பர்ச்சேஸ்/ரிடீம் செய்யும் நேரத்திலோ அந்தத் தகவல்கள் உங்கள் நடப்புப் பரிவர்த்தனைகள், பேலன்ஸ் விவரம் அல்லது பிற அக்கவுண்ட்/திட்ட விவரங்களைத் துல்லியமாகப் பிரதிபலிக்காமல் போகலாம் என்பதையும் நீங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் வழங்குநருடனான ஒப்பந்தத்தின்படி, அத்தகைய பரிவர்த்தனைகளின் விளைவாக உங்களுக்குக் கட்டணங்கள் விதிக்கப்படலாம் (ஓவர்டிராஃப்ட் கட்டணங்கள், பிற கட்டணங்கள் போன்றவை). இல்லையென்றால், பர்ச்சேஸ்/ரிடீம் செய்வதற்கான உங்கள் முயற்சி நிறைவுபெறாமல் போகலாம்.

27. பொறுப்பிற்கான வரம்புகள்; எதிர்பாராத நிகழ்வு

உரிமைகோரலின் வகை அல்லது நடவடிக்கைக்கான மூலத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், உங்களுக்கோ ஏதேனும் மூன்றாம் தரப்புக்கோ ஏதேனும் Google தரப்பு அல்லது சேவைகள் தொடர்பாகவோ சேவைகள் மூலம் வாங்கப்படும், பெறப்படும், விற்கப்படும் அல்லது கட்டணம் செலுத்தப்படும் ஏதேனும் பொருட்கள், சேவைகள் அல்லது தகவல்கள் தொடர்பாகவோ ஏற்படக்கூடிய மறைமுகமான, விளைவான, பிரத்தியேகமான சேதங்கள்/இழப்புகளுக்கும் இழப்பீட்டுத் தண்டனைகளுக்கும் (லாபங்கள், நன்மதிப்பு, பயன்பாடு, தரவு ஆகியவற்றின் இழப்பு அல்லது நிதிரீதியாக அளவிட முடியாத பிற இழப்புகளுக்கான சேதங்களும் இன்ன பிறவும்) எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்கோ ஏதேனும் மூன்றாம் தரப்பிற்கோ Google அல்லது அதன் குழு நிறுவனங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது (அத்தகைய சேதம்/இழப்பிற்கான சாத்தியம் குறித்து Google தரப்பிற்கு முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் கூட). இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளில் இருந்தோ அவை தொடர்பாகவோ ஏற்படும் Google தரப்புகளின் மொத்தக் கடப்பாடு எந்தச் சூழ்நிலையிலும் உரிமைகோரல் தேதிக்கு முந்தைய மூன்று மாதக் காலத்தின்போது உங்கள் செல்லுபடியாகும் பரிவர்த்தனைகளில் இருந்து Google உண்மையில் பெற்றுப் பிடித்துவைத்துள்ள நிகரக் கட்டணத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது.

பின்வருபவற்றுக்காக எந்தவொரு தரப்பின் பொறுப்பையும் விலக்குவதோ வரம்பிடுவதோ இந்த Google Pay விதிமுறைகளில் உள்ள எதற்கும் நோக்கமல்ல: (i) உயிரிழப்பு அல்லது தனிநபர் காயம்; (ii) மோசடி; (iii) மோசடியான தவறான பிரதிநிதித்துவம்; அல்லது (iv) சட்டத்தால் விலக்கவோ வரம்பிடவோ முடியாத ஏதேனும் பொறுப்பு.

நீங்களும் Googleளும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்பிற்கான வரம்புகளைச் சார்ந்து இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளீர்கள் என்பதையும் அந்த வரம்புகள் தரப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு அத்தியாவசிய அடிப்படை என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். மேற்கூறியவற்றில் எதையும் கட்டுப்படுத்தாமல் அவற்றுடன் கூடுதலாக, எந்தவொரு Google தரப்பும் அதன் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதேனும் சூழலால் ஏற்படும் எந்தவொரு செயலிழப்பு/தாமதத்திற்கும் பொறுப்பேற்காது. அரசாங்க நடவடிக்கை, தீவிரவாதச் செயல்கள், நிலநடுக்கம், நெருப்பு, வெள்ளம், பிற இயற்கைச் சீற்றங்கள், பணி தொடர்பான இடையூறுகள், மின்சாரத் துண்டிப்புகள், இணைய இணைப்புச் சிக்கல்கள் ஆகியவையும் இன்ன பிறவும் இதிலடங்கும்.

28. முடக்கம், இடைநீக்கம்

செயலற்ற நிலை, இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளையோ அவ்வப்போது நாங்கள் உருவாக்கக்கூடிய பிற கொள்கைகளையோ மீறுதல் உள்ளிட்ட எந்தவொரு காரணத்திற்காகவும் இன்ன பிற காரணங்களுக்காகவும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட உங்கள் Google Pay சேவைகளின் பயன்பாட்டை அறிவிப்பின்றியும் உங்களுக்கோ ஏதேனும் மூன்றாம் தரப்பிற்கோ பொறுப்பேற்காமலும் எங்களின் முழுமையான சொந்த விருப்புரிமைப்படி இடைநீக்க/முடக்க எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.

29. விளம்பரப்படுத்துதல்

சில Google Pay அம்சங்கள் விளம்பர வருவாயால் ஆதரிக்கப்படக்கூடும் என்பதால் அவற்றில் விளம்பரங்கள் காட்டப்படலாம். சேவைகளுக்கான அணுகலையும் பயன்பாட்டையும் Google உங்களுக்கு வழங்குவதற்கு ஈடாக, Google அத்தகைய விளம்பரங்களைக் காட்டலாம் என நீங்கள் ஏற்கிறீர்கள்.

30. நிர்வகிக்கும் சட்டம்; அதிகார எல்லை

Google Pay விதிமுறைகளும் Google Pay கொள்கைகளும் இந்தியச் சட்டங்களால் நிர்வகிக்கப்படும், அந்தச் சட்டங்களின்படியே பொருள்கொள்ளப்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் காரணமாக எழும் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இந்தியாவிலுள்ள புது டெல்லியில் அதிகார எல்லை கொண்டுள்ள உரிய நீதிமன்றங்கள்/தீர்ப்பாயங்களில் மட்டுமே நடத்தப்படக்கூடும் என்பதையும் அந்த நீதிமன்றங்கள்/தீர்ப்பாயங்களின் அதிகார எல்லைக்குத் தங்களைத் தீர்க்கமாக உட்படுத்திக்கொள்வதாகவும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். பொருந்தக்கூடிய சட்டம், ஒழுங்குமுறை, சட்டரீதியான செயல்முறை அல்லது அமல்படுத்தக்கூடிய அரசாங்கக் கோரிக்கையைப் பூர்த்திசெய்வதற்காக Google Payயில் நீங்கள் வழங்கிய தகவல்களை நாங்கள் பகிர வேண்டியிருக்கலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.

31. சேவை விதிமுறைகளில் மாற்றங்கள்

எங்களின் முழுமையான சொந்த விருப்புரிமைப்படி, ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளின் எந்தவொரு பகுதியையும் மாற்றவோ மாற்றியமைக்கவோ திருத்தவோ எங்களுக்கு உரிமையுள்ளது. மாற்றங்கள் முதல்முறையாகப் பதிவிடப்பட்ட பிறகே அவை நடைமுறைக்கு வருவதோடு உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும். மேலும், பதிவிடப்பட்ட தேதிக்குப் பிறகு துவங்கப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அவை பொருந்தும். அத்தகைய மாற்றம் எதையாவது நீங்கள் ஏற்கவில்லை என்றால், நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வது மட்டுமே உங்களுக்கான ஒரே தீர்வாகும்.

அதுமட்டுமின்றி, Google Pay ஆப்ஸ்/சேவைகளை (முழுமையாகவோ பகுதியளவிலோ) எப்போது வேண்டுமானாலும் அறிவிப்புடனோ அறிவிப்பின்றியோ தற்காலிகமாக/நிரந்தரமாக மாற்றவோ நிறுத்தவோ எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. எங்கள் சொந்த விருப்புரிமைப்படி, பொருந்தக்கூடிய கட்டணங்கள் உட்பட சேவைகளையும் நாங்கள் மாற்றக்கூடும். நீங்கள் மாற்றங்களை ஏற்கவில்லை என்றால், நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளலாம். மாற்றங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், அந்த மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும். சேவைகள் தொடர்பான மாற்றம், இடைநீக்கங்கள் அல்லது நிறுத்தம் எதற்கும், உங்களுக்கோ ஏதேனும் மூன்றாம் தரப்பிற்கோ நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள்.

32. ஆங்கில மொழிக் கட்டுப்பாடுகள்

இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளின் எந்தவொரு மொழிபெயர்ப்பும் உங்கள் வசதிக்காகவே வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள விதிமுறைகள், நிபந்தனைகள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அர்த்தங்கள் ஆங்கில மொழியிலுள்ள வரையறைகளுக்கும் பொருள்விளக்கங்களுக்கும் உட்பட்டவையாகும். வழங்கப்பட்டுள்ள எந்தவொரு மொழிபெயர்ப்பும் ஆங்கிலத்தில் உள்ள அசல் ஆவணத் தகவல்களைத் துல்லியமாகப் பிரதிபலிக்காமல் போகலாம்.

33. பொறுப்புமாற்றம்

இந்த ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளையும் இதில் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் உரிமைகளையும் உரிமங்களையும் நீங்கள் மாற்றவோ பொறுப்புமாற்றம் செய்யவோ கூடாது. இந்த ஒப்பந்தத்தின் பலன்கள்/கட்டாயங்களை முழுமையாகவோ பகுதியளவிலோ நாங்கள் பொறுப்புமாற்றக்கூடும். அத்தகைய பொறுப்புமாற்றம் குறித்து நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். இந்த விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உரிய தரப்புகள் அந்தப் பொறுப்புமாற்றத்திற்குக் கட்டுப்பட வேண்டும்.

34. உரிமையை விட்டுக்கொடுத்தல்

இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாத பட்சத்தில், ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளின் கீழுள்ள ஓர் உரிமை/தீர்வைப் பயன்படுத்தத் தவறினாலோ தாமதமாகப் பயன்படுத்தினாலோ அந்த உரிமை/தீர்வுக்கான உரிமையை விட்டுக்கொடுப்பதாகவோ வேறு ஏதேனும் உரிமைகள்/தீர்வுகளுக்கான உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவோ அர்த்தமாகாது. மேலும், ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளின் கீழுள்ள ஏதேனும் உரிமை/தீர்வை ஒருமுறையோ பகுதியளவோ பயன்படுத்துவது, அந்த உரிமை/தீர்வை மேலும் பயன்படுத்துவதையோ வேறு ஏதேனும் உரிமை/தீர்வை மேலும் பயன்படுத்துவதையோ தடுக்காது.

35. நீடிக்கும் விதிமுறைகள்

இந்த ஒப்பந்தத்திற்கான ஏதேனும் அல்லது அனைத்துத் தரப்புகளாலும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் வரை நீடித்திருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளில் உள்ள விதிமுறைகளும் விதிகளும் (அவற்றின் இயல்புத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தின்படி) இந்த ஒப்பந்தம் நிறைவுசெய்யப்பட்ட பிறகோ முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகோ கூட நீடித்திருக்கும்.

36. ஒப்பந்தத்தின் செயல்படுத்தக்கூடிய தன்மை

ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளில் உள்ள ஏதேனும் விதி தற்போது அல்லது எதிர்காலத்தில் முழுமையாகவோ பகுதியளவோ செல்லுபடியாகாமல்/நிறைவேற்ற முடியாமல் இருக்கும்பட்சத்தில், அந்த விதியின் சிறுபகுதியை நீக்கினால் அது செல்லுபடியாகும்/நிறைவேற்றக்கூடியதாகும் என்றால், அதைச் செல்லுபடியாக்கத் தேவைப்படக்கூடிய அத்தகைய நீக்கங்களுடன் அந்த விதி பயன்படுத்தப்படும். உரிய அதிகார எல்லையில் உள்ள ஏதேனும் நீதிமன்றம்/தீர்ப்பாயம் ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளின் ஏதேனும் விதியைச் சட்டத்திற்குப் புறம்பானது அல்லது பயனற்றது எனத் தீர்மானித்தால், ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளின் மற்ற விதிகள் தொடர்ந்து இயக்கத்திலேயே இருக்கும். மேலும், சட்டத்திற்குப் புறம்பான அல்லது பயனற்ற அந்த விதி அகற்றப்பட்டு, அதன் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு புதிய விதி சேர்க்கப்படும்.

Google Pay விதிமுறைகளுக்கான பிற்சேர்க்கை: இந்தியாவில் நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான Google Pay சேவை விதிமுறைகள்

1. அறிமுகம்

பொருந்தக்கூடிய விதிமுறைகள். இந்தியாவில் நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான (“நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான Google Pay விதிமுறைகள்”) இந்த Google Pay சேவை விதிமுறைகள் Google Pay விதிமுறைகளின் ஒரு பகுதியாகவும் அவற்றின் கூடுதல் விதிமுறைகளாகவும் இருப்பதோடு, Google Payயில் UPIயைப் பயன்படுத்தத் தேர்வுசெய்யும் (“UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகள்”) நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்களுக்கு (கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி) பொருந்தும். நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான இந்த Google Pay விதிமுறைகளுக்கும் மீதமுள்ள Google Pay விதிமுறைகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு இருந்தால், UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகளைப் பொறுத்தவரை நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான இந்த Google Pay விதிமுறைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள். 1999ல் இயற்றப்பட்ட அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்திற்கு (“FEMA - Foreign Exchange Management Act”) இணங்கும் வகையில், நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான (வெளிப்புற) ரூபாய் அக்கவுண்ட்டுகள் (“NRE அக்கவுண்ட்டுகள்”) அல்லது நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான சாதாரண ரூபாய் அக்கவுண்ட்டுகளையும் (“NRO அக்கவுண்ட்டுகள்”), பின்வருபவற்றுள் ஏதேனுமொரு தேசக் குறியீட்டை உடைய மொபைல் எண்களையும் வைத்துள்ள (“நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள்”), இந்தியாவில் நிரந்தரமாக வசிக்காத (“NRIs - Non-Resident Indians”) பயனர்களுக்கு UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகள் கிடைக்கின்றன:

  • சிங்கப்பூர் தேசக் குறியீடு (+65).

UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகளையும் நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான இந்த Google Pay விதிமுறைகளையும், பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு பிற தேசக் குறியீடுகளுடனான மொபைல் எண்களை வைத்துள்ள NRI பயனர்களுக்கும் Google அவ்வப்போது கிடைக்கச் செய்யக்கூடும்.

UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகளைப் பயன்படுத்தத் தேர்வுசெய்யும் நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள், இந்தியாவில் நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான இந்த Google Pay சேவை விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ள மற்றும் Google Pay விதிமுறைகள் அடங்கிய ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளுக்கு (அவர்கள் இந்தியாவில் வசிப்பவர்கள் போலவே) இணங்க வேண்டும்.

நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான இந்த Google Pay விதிமுறைகளில் எதை வேண்டுமானாலும் அவ்வப்போது மாற்றுவதற்கு Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். ஒருங்கிணைந்த Google Pay விதிமுறைகளையும் நிரந்தரமாக வசிக்காதவர்களுக்கான இந்த Google Pay விதிமுறைகளையும் நீங்கள் அவ்வப்போது படித்துப் பார்த்து சமீபத்திய மாற்றங்களைத் தெரிந்துவைத்திருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

2. UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் பரிவர்த்தனைகள்

பரிவர்த்தனை வரம்புகள். UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையும், (i) FEMAவின் கீழ்; மற்றும்/அல்லது (ii) UPI தொடர்பாக NPCIயால்; மற்றும்/அல்லது (iii) உங்கள் NRE அக்கவுண்ட் அல்லது NRO அக்கவுண்ட் (சூழலுக்கு ஏற்ப) பராமரிக்கப்படும் பேங்க்கால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சப் பரிவர்த்தனை வரம்புகளுக்கு உட்பட்டதாகும்.

அனுமதிக்கப்படும் பரிவர்த்தனைகள். FEMA உட்பட பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டு, NRE அக்கவுண்ட்டுகளுக்கோ NRO அக்கவுண்ட்டுகளுக்கோ (சூழலுக்கு ஏற்ப) அனுமதிக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே நீங்கள் UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.

3. முடக்கப்பட்ட அம்சங்கள்

Google Pay மற்றும்/அல்லது UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகளில் இருந்து அம்சங்கள் மற்றும்/அல்லது செயல்பாடுகளை முன்னறிவிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் தனது சொந்த விருப்புரிமைப்படி திரும்பப் பெறுவதற்கு Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள். இதன் விளைவாக, UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகளைப் பயன்படுத்தத் தேர்வுசெய்யும் நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்களுக்கு அத்தகைய அம்சங்கள்/செயல்பாடுகள் தொடர்பாக Google Pay விதிமுறைகளில் உள்ள தொடர்புடைய விதிகள் பொருந்தாது.

உதாரணமாக, UPIயில் NRE/NRO அக்கவுண்ட்டுகளைப் பயன்படுத்தத் தேர்வுசெய்யும் நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்களுக்கு பின்வரும் Google Pay அம்சங்கள் முடக்கப்பட்டுள்ளன:

(a) நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்களிடம் ஃபோன்புக் அணுகல் கேட்கப்படாது. நிரந்தரமாக வசிக்காத அத்தகைய தகுதிபெறும் பயனர்களுக்கு Google Pay ஆப்ஸில் ஃபோன்புக் தொடர்புத் தகவல்கள் எதுவும் காட்டப்படாது.

(b) நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள் Google Payயில் கடன் வசதிச் சேவைகளையோ பிற நிதிச் சேவைத் தயாரிப்புகளையோ பெறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

(c) நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள் சர்வதேசப் பேமெண்ட்டுகளுக்குப் பேமெண்ட் வகைகளைச் சேர்ப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

(d) நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள் விர்ச்சுவல் கணக்கு எண்ணை உருவாக்குவதன் மூலம் Google Payயில் கிரெடிட்/டெபிட் கார்டுகளை டோக்கனைஸ் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

(e) நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள் FEMA சட்டத்தின்படி, NRE அக்கவுண்ட்டுகளுக்கும் இந்தியாவுக்கு வெளியே நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு அனுமதிக்கப்படும் பிற அக்கவுண்ட்டுகளுக்கும் இடையே நிதிப் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

(f) NRE அக்கவுண்ட்டுகளையோ NRO அக்கவுண்ட்டுகளையோ பயன்படுத்தும் நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனரைப் பரிந்துரைப்பதற்காக, Google Pay வாடிக்கையாளராக எந்தவொரு பயனரும் கேஷ்பேக் ரிவார்டுகளோ ஸ்கிராட்ச் கார்டுகளோ பெறுவதற்குத் தகுதிபெற மாட்டார்கள். அதேபோன்று, NRE அக்கவுண்ட்டுகளையோ NRO அக்கவுண்ட்டுகளையோ பயன்படுத்தும் நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்களும் பரிந்துரைக் கேஷ்பேக் ரிவார்டுகளையோ ஸ்கிராட்ச் கார்டுகளையோ பெறுவதற்குத் தகுதிபெற மாட்டார்கள்.

(g) NRE அக்கவுண்ட்டுகளையோ NRO அக்கவுண்ட்டுகளையோ பயன்படுத்தும் நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள் பிற GPay பயனர்களிடமிருந்து பேமெண்ட்டுகளைப் பெறுவதற்கான கோரிக்கைகளை அனுப்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

(h) நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள் Google Payயில் RuPay கிரெடிட் கார்டுகளை இணைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

(i) நிரந்தரமாக வசிக்காத தகுதிபெறும் பயனர்கள் தங்கள் UPI ஐடிகளைத் தங்கள் மொபைல் எண்களுடன் இணைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.